GATE: முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கால அவகாசம்…!

college 5g mobile 2025

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுகளுக்கு இந்த மதிப்பெண் செல்லும். அதன்படி 2026-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு வரும் பிப்ரவரி 7, 8 மற்றும் 14, 15-ம் தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக காலை, மதியம் என இருவேளைகளிலும் நடைபெற உள்ளது.

இந்த முறை கேட் தேர்வை குவாஹாட்டி ஐஐடி நடத்தவுள்ளது. மேலும், தேர்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாக பிரித்து அமைக்கப்பட இருக்கின்றன. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஆகஸ்ட் 28-ல் தொடங்கி செப்டம்பர் 28-ம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் https://gate2026.iitg.ac.in/ எனும் வலைத்தளத்தில் சென்று துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை தவறவிடுபவர்கள் தாமதக் கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதனுடன் பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு முடிவுகள் மார்ச் 19-ல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்த ஒரு உணவுமுறையால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 15 மில்லியன் இறப்புகளைத் தடுக்கலாம்!. ஆய்வில் தகவல்!.

Sat Oct 4 , 2025
பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்ததாகவும், இறைச்சி மற்றும் பால் பொருட்கள் குறைவாகவும் உள்ள ஒரு உணவுமுறை, ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 15 மில்லியன் இறப்புகளைத் தடுக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. “பிளானட்டரி ஹெல்த் டயட் (Planetary Health Diet)” எனப்படும் உணவு முறை , அதாவது மனித உடலுக்கும் பூமியின் சூழலுக்கும் ஆரோக்கியமானதாக வடிவமைக்கப்பட்ட உணவு முறை, உலகம் முழுவதும் பரவலாக பின்பற்றப்பட்டால், ஆண்டுதோறும் சுமார் […]
Planetary diet

You May Like