அகவிலைப்படி என்பது விலையேற்றத்தால் ஊழியர்களின் வாங்கும் சக்தி குறைவதை ஈடு செய்யும் ஒரு பணப்பலன் ஆகும்.. மத்திய அரசு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது.. அந்த வகையில் மாநில அரசுகளும் மத்திய அரசை பின்பற்றி அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றன.
இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை உயர்ந்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 55% ஆக இருந்த அகவிலைப்படி 58% உயர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.. ஜூலை 1 முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரரகள் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அகவிலைப்படி உயர்வால் ஆண்டுக்கு ரூ.1829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது..
Read More : இவர்களுக்கும் விரைவில் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. முதலமைச்சர் சொன்ன குட்நியூஸ்!



