நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் அகரம் பவுண்டேஷன் நடத்தி வருகின்றனர். இதன்மூலம் ஏழை, எளிய மக்களை படிக்க வைத்து வருகின்றனர். ‘அகரம் பவுண்டேஷன்’ 15வது ஆண்டிலும் அடியெடுத்து வைப்பதையொட்டி கடந்த 3 ஆம் தேதி சென்னையில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகரும், ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன் பங்கேற்றார்.
அவர் பேசுகையில் சர்வாதிகாரத்தையும், சனாதனத்தையும் வேறறுக்க வேண்டுமென்றால் அது கல்வியால் மட்டும் தான் முடியும் என்று பேசினார். அவரின் பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சனாதனத்துக்கு எதிராக பேசிய நடிகர் கமல்ஹாசனின் சங்கை அறுப்போம் என துணை நடிகர் ரவிச்சந்திரன் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த விவகாரமானது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஜி-யுமான மௌரியா, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். இந்த மிரட்டல் குறித்து காவல் துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன்: நடிகர் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியின் ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனாவின் தந்தையாக நடித்து வருகிறார். இதுதவிர சன்டிவியில் வரும் மருமகள் சீரியலில் கதாநாயகியின் அப்பாவாகவும், ஜீ தமிழில் இதயம் சீரியல் உள்பட பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.
Read more: அமெரிக்காவில் வேகமெடுக்கும் புதிய வகை கோவிட் மாறுபாடு.. அறிகுறிகள் எப்படி இருக்கும்..?