நேற்றிரவு ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு குனார் மாகாணத்தில் 6.0 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. உள்ளூர் நேரப்படி இரவு 11:47 மணிக்கு (1917 GMT) கிட்டத்தட்ட 200,000 மக்கள் வசிக்கும் ஜலாலாபாத் நகரத்திலிருந்து கிழக்கு-வடகிழக்கில் சுமார் 27 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து குறைந்தது மூன்று பின்னதிர்வுகள் ஏற்பட்டது.. கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 250 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நங்கர்ஹார் மாகாணத்தின் தகவல் தொடர்பு அதிகாரி சேதிகுல்லா குரைஷி பத்லூன் இதுகுறித்து பேசிய போது “ பெரும்பாலான உயிரிழப்புகள் குனாரில் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் ஒன்பது பேர் நங்கர்ஹாரில் உயிரிழந்துள்ளனர்.” என்று தெரிவித்தார்..
சுகாதார அமைச்சர் ஷரபத் ஜமான் இதுகுறித்து பேசிய போது. “உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் காயங்கள் அதிகமாக உள்ளன, ஆனால் அந்தப் பகுதியை அணுகுவது கடினம் என்பதால், எங்கள் குழுக்கள் இன்னும் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளன,” என்று தெரிவித்தார்.
காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், தொலைதூர மாவட்டங்களிலிருந்து வரும் தகவல்கள் வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்..
நள்ளிரவு நிலநடுக்கம் சுமார் 8-10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது, இதனால் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பிராந்தியத்தின் மலை எல்லையில் உள்ள மண் மற்றும் கல் வீடுகள் இடிந்து விழுந்தன. மீட்புப் பணியாளர்கள் பல மாவட்டங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டு, இடிபாடுகளில் இருந்து உயிர் பிழைத்தவர்களைத் தேடினர். வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் பல குழந்தைகள் இறந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
ஜலாலாபாத் மற்றும் பிற நகரங்களில் கட்டிடங்கள் பல வினாடிகள் குலுங்கின, அதே நேரத்தில் கிட்டத்தட்ட 370 கி.மீ தொலைவில் உள்ள இஸ்லாமாபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது..
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்கள் என்பது ஒரு தொடர்ச்சியான பேரழிவாகும்.. யூரேசிய மற்றும் இந்திய டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பில், குறிப்பாக இந்து குஷ் பகுதியில் இந்த நாடு அமைந்துள்ளது.. இதனால், நில அதிர்வு நடவடிக்கைகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக ஆக்குகிறது. ஒவ்வொரு பெரிய நிலநடுக்கமும் ஏற்கனவே பல தசாப்தங்களாக மோதலால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் மறுசீரமைப்பு முயற்சிகளை மேலும் சிக்கலாக்குகிறது.
Read More : ‘வெளிப்படையான பயங்கரவாத ஆதரவை ஏற்க முடியுமா?’: பாகிஸ்தான் பிரதமர் கலந்து கொண்ட SCO கூட்டத்தில் மோடி கேள்வி..