பலி எண்ணிக்கை 96-ஆக உயர்வு.. உலகை உலுக்கிய ஹாங்காங் தீ விபத்துக்கு என்ன காரணம்..? அதிர்ச்சி தகவல்..

hong kong fire2

ஹாங்காங்கின் தாய் போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. 76 பேர் காயமடைந்த நிலையில் அதில் 28 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் காணாமல் போன 279 பேரில் சிலர்  மீட்கப்பட்டுள்ளார்.. தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால குழுக்கள் தீப்பிடித்து எரியும் கட்டிடங்களிலிருந்து மக்களை வெளியே இழுத்து வருகின்றனர்.


தீயணைப்பு வீரர்கள் கடந்த இரண்டரை நாட்களாக இடைவிடாமல் போராடி வருகின்றனர். சுமார் 2,000 குடியிருப்புகள் மற்றும் 4,800 குடியிருப்பாளர்களைக் கொண்ட இந்த வளாகம், முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு வந்தது. 32 மாடிகள் கொண்ட ஒரு கோபுரத்தின் வெளிப் பகுதியில் உள்ள மூங்கில் சாரத்தில் (Bamboo Scaffolding) முதலில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலத்த காற்று காரணமாக, தீ பின்னர் கட்டிடத்திற்குள் பரவி, மேலும் ஆறு கோபுரங்களுக்கும் பரவியது. தீ விபத்தில் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட மூன்று பேர் மீது கொலைக்குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல்துறை கைது செய்துள்ளது. இந்தக் கட்டுமானத் திட்டம் குறித்து ஹாங்காங்கின் ஊழல் எதிர்ப்பு அமைப்பும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

புதுப்பித்தல் பணி நடைபெறும் அனைத்துக் குடியிருப்பு வளாகங்களிலும் பாதுகாப்புத் தரங்களை உறுதிப்படுத்த ஆய்வுகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது 1996ஆம் ஆண்டின் கோவூன் தீ விபத்தைக் (41 பேர் பலி) காட்டிலும் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி, நகரத்தின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் கொடூரமான விபத்தாக மாறியுள்ளது.

Read more: Flash : மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

English Summary

Death toll rises to 96.. What is the cause of the Hong Kong fire that shook the world..? Shocking information..

Next Post

நியூ இயர்க்கு முன்னாடி உடல் எடையை குறைக்கனுமா..? அப்ப இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க..

Fri Nov 28 , 2025
Want to lose weight before the New Year? Then just follow this..
pcos weight gain overweight woman mobile

You May Like