’வீட்டில் கடன் பிரச்சனை’…!! வேலைக்கு சென்ற மனைவியை குடிபோதையில் கொடூரமாக தாக்கிய கணவன்..!!

கடன் பிரச்சனையை சமாளிக்க வேலைக்கு சென்ற மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் திலீப் (27) என்பவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். வீட்டில் கடன் பிரச்சனை காரணமாக இவரது மனைவி அருகே உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இது திலீப்புக்கு சுத்தமாக பிடிக்காததால் மனைவியை வேலைக்கு செல்லக்கூடாது என கண்டித்துள்ளார். ஆனால், அதற்கு அவருடைய மனைவி மறுப்பு தெரிவித்து கடனை அடைக்கும் வரை தான் வேலைக்கு செல்வதாக கூறியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த திலீப், தன்னுடைய காதல் மனைவியை கொடூரமான முறையில் தாக்கி அதை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

’வீட்டில் கடன் பிரச்சனை’...!! வேலைக்கு சென்ற மனைவியை குடிபோதையில் கொடூரமாக தாக்கிய கணவன்..!!

இந்நிலையில், கணவன் தாக்கியதில் முகம் முழுவதும் ரத்த காயத்துடன் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தன்னுடைய கணவன் வேலைக்கு செல்லாமல் தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டு செலவுக்கு பணம் தராமல் தன்னை சித்திரவதை செய்வதாக கூறியுள்ளார். அந்தப் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திலீப்பை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், திலீப்பின் மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

'மாணவர்களை வைத்து பிண அரசியல் வேண்டாம்' கள்ளக்குறிச்சி சம்பவத்தை மேற்கோள் கட்டிய நீதிபதி.!

Thu Oct 20 , 2022
சமீபகாலமாக மாணவ, மாணவிகள் மரணம் அதிகம் தொடர்ந்து வரும் நிலையில் அதனை வைத்து அரசியல் செய்வதும் நடைமுறையாகி வருகிறது. ஏற்கனவே, கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு இதற்கு பெரும் சாட்சியாக இருக்கின்ற நிலையில் மேலும் இதுபோன்று கடையநல்லூரில் இறந்த மாணவன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்து உள்ளனர். இது தொடர்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மாணவர்களின் பிணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் […]
மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க பெற்றோர் மறுப்பு..!! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

You May Like