டெல்லி கார் வெடிப்பு வழக்கில் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிவப்பு நிற ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர். வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 உடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றொரு சிவப்பு நிற காரையும் வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, டெல்லி போலீசார் தேசிய தலைநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், சாவடிகள் மற்றும் எல்லை சோதனைச் சாவடிகளில் ஈக்கோ ஸ்போர்ட் காரைக் கண்டுபிடிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது..
வாகனத்தைக் கண்டுபிடிக்க டெல்லி காவல்துறை 5 தனிப்படைகளை நியமித்துள்ளது., அதே நேரத்தில் அண்டை மாநிலங்களான உ.பி. மற்றும் ஹரியானா காவல்துறையினரும் அதிக விழிப்புணர்வைப் பேணவும் தேடலில் உதவவும் எச்சரிக்கப்பட்டன. டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சந்தேக நபரான டாக்டர் உமர் உன் நபியின் பெயரில் சிவப்பு நிற ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
இந்த நிலை உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, சிவப்பு நிற போர்ட் எக்கோஸ்போர்ட் (Ford EcoSport) காரை டெல்லி போலீஸ் கண்டுபிடித்துள்ளது. DL10CK0458 எனும் பதிவு எண்ணைக் கொண்ட இந்தக் கார், ஹரியானா மாநிலம் கந்தவாலி கிராமம் அருகே உள்ள ஒரு பண்ணை வீட்டின் பக்கத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த கார் ராஜௌரி கார்டன் பகுதியில் உமர் உன் நபி என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் தற்போது இந்த வழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபர் ஆவார்.
செங்கோட்டை கார் வெடிப்பு
திங்கள்கிழமை மாலை டெல்லியில் நடந்த பயங்கர வெடிகுண்டு வெடிப்பு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்அடுத்தியது.. லால் கிலா மெட்ரோ நிலையம் அருகே உள்ள நுழைவு வாயில் எண் 1 அருகே நிறுத்தப்பட்டிருந்த ஹூண்டாய் i20 கார் திடீரென தீப்பிடித்து வெடித்தது. இந்த வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். வெடிப்பின் தாக்கத்தால் அருகிலிருந்த பல வாகனங்களும் சேதமடைந்தன.
இந்த வெடிப்புக்குப் பின்னால் பரிதாபாத் பகுதியில் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்த பயங்கரவாத குழு தொடர்புள்ளது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.. அங்கு ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது , அதே பயங்கரவாத குழுவே டெல்லி தாக்குதலுக்கும் காரணமா என்பதை விசாரித்து வருகின்றனர்..



