டெல்லி குண்டுவெடிப்பு: தவறான அங்கீகாரம்.. அல்-ஃபலா பல்கலைக்கழகத்திற்கு NAAC நோட்டீஸ்..

al falah university 2

தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தவறான அங்கீகார விவரங்களை காட்டியதாகக் கூறி, அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.. இந்த நடவடிக்கை, நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டைக்கு அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வெடிப்பில்13 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.


இந்த கார் வெடிப்பு நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, அதிகாரிகள் “வைட் காலர் பயங்கரவாத குழுவை” (white-collar terror module) கண்டறிந்திருந்தனர். இதில், அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய மூன்று மருத்துவர்கள் உட்பட பலர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

NAAC விளக்கம் கோரி நோட்டீஸ்

தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) அனுப்பிய நோட்டீஸில் “ அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகம் NAAC-இனால் அங்கீகரிக்கப்படவோ, அல்லது அங்கீகாரத்துக்காக விண்ணப்பிக்கவோ செய்யவில்லை. ஆனால் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ‘அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகம் என்பது Al-Falah Charitable Trust-இன் முயற்சி; இது 1997 முதல் Al Falah School of Engineering and Technology (NAAC மதிப்பீடு: ‘A’), 2008 முதல் Brown Hill College of Engineering and Technology, மற்றும் 2006 முதல் Al-Falah School of Education and Training (NAAC மதிப்பீடு: ‘A’) ஆகிய மூன்று கல்லூரிகளை இயக்குகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.”

“இது முற்றிலும் தவறானது மற்றும் பொதுமக்களை குறிப்பாக பெற்றோர், மாணவர்கள், மற்றும் கல்வி துறையுடன் தொடர்புடையவர்களை தவறாக வழிநடத்துகிறது,” என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, NAAC பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கோரியதுடன், அதன் இணையதளம் மற்றும் பொதுமக்களுக்குக் கிடைக்கும் பிற ஆவணங்களில் இருந்து அங்கீகார தொடர்பான தவறான தகவல்களை உடனடியாக நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

செங்கோட்டை கார் வெடிப்பு

நேற்று மாலை டெல்லியில் பெரிய வெடிப்பு ஒன்று அதிர்ச்சி ஏற்படுத்தியது. மாலை 6.52 மணியளவில், ரெட்ஃபோர்ட் அருகே நின்றிருந்த ஹூண்டாய் i20 கார் வெடித்ததில், 13 பேர் உயிரிழந்தும், பலர் காயமடைந்தும் உள்ளனர்.

கார் வெடித்து சிதறியதால் அருகிலிருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன.. வெடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட தீ அருகிலிருந்த வாகனங்களுக்கும் பரவியது. இந்த சம்பவம் ரெட்ஃபோர்ட் மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே நடைபெற்றது. உமர் எனப்படும் நபர், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் சம்பவ தினம் டெல்லியின் பல பகுதிகளில் CCTV காட்சிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ரெட்ஃபோர்ட் அருகே நடைபெற்ற இந்த கார் வெடிப்பை “தீவிரவாதச் சம்பவம்” என்று அறிவித்துள்ளது.

அமைச்சரவை உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், குற்றவாளிகள், அவர்களுக்கு துணைநின்றவர்கள் மற்றும் நிதியுதவி அளித்தவர்கள் ஆகியோரை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தும் வகையில் விசாரணையை துரிதமாக நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

Read More : டெல்லி கார் குண்டுவெடிப்பு: மற்றொரு மருத்துவர் முகமது ஆரிஃப் கைது! யார் இவர்? பகீர் பின்னணி!

RUPA

Next Post

Flash : ஏர் இந்தியா விமானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. அதிகாரிகள் தீவிர சோதனை!

Thu Nov 13 , 2025
இன்று டொரோண்டோவில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு (AI188) இன்று வெடிகுண்டு மிரட்டல் எச்சரிக்கை வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், விமானம் பாதுகாப்பாக டெல்லியில் தரையிறங்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை நேரத்தில் அந்த விமானத்தில் குண்டு இருப்பதாக டெல்லி காவல்துறைக்கு ஒரு செய்தி வந்தது. இதையடுத்து, டெல்லி விமான நிலையத்தின் குண்டு மிரட்டல் மதிப்பீட்டு குழு (Bomb Threat Assessment Committee – BTAC) […]
Air India 1

You May Like