டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பொதுமக்களிடம் பேசிக்கொண்டிருந்த போது திடீரென ஒருவர் தாக்குதல் நடத்தியதால் பரப்பரப்பு.
டெல்லி முதல்வர் ரேகா குப்தா புதன்கிழமை தேசிய தலைநகரில் உள்ள சிவில் லைன்ஸில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தின் போது தாக்கப்பட்டார். இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை நடத்திய 35 வயதுடைய நபரை, டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.
முதல்வர் மீதான தாக்குதலுக்கு பாஜகவின் டெல்லி பிரிவுத் தலைவர் வீரேந்திர சச்தேவா கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் இந்த தாக்குதலை கண்டித்து, இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றும், முதல்வருக்கே பாதுகாப்பு இல்லாதபோது, ஒரு சாதாரண மனிதர் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கேட்டார். இந்த சம்பவத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Read more: சருமத்தை பளபளப்பாக்கும் பசும்பால்.. தினமும் முகத்தில் தடவுவதால் இத்தனை நன்மைகளா..?