தன்னை பாலியல் ரீதியாக திருப்திப்படுத்த முடியாததால் தனது கணவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. இந்த அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் அரங்கேறி உள்ளது.. ஜூலை 20 ஆம் தேதி மாலை 4.15 மணியளவில், நிஹால் விஹார் காவல் நிலையத்திற்கு உள்ளூர் மருத்துவமனையிலிருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது.. அப்போது அந்த பெண், தனது கணவர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்..
மேலும் முகமது ஷாஹித் என்ற தனது கணவரை பல கத்திக்குத்து காயங்களுடன் அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் அந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட உடன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் மருத்துவமனைக்குச் சென்றபோது, அந்தப் பெண் தனது கணவர் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டதாகக் கூறினார். இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கையில், கத்திக்குத்து காயங்கள் முன்பக்கத்தில் இருந்து தாக்கப்பட்டது போல் இருந்தது.. எனவே வேறொருவர் அவரை கத்தியால் குத்தியிருக்கலாம் என்பது தெரியவந்தது..
இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த பெண்ணின் மொபைல் போனையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.. அப்போது காவல்துறையினர் அந்தப் பெண்ணின் இணைய தேடல் வரலாற்றைக் கண்டுபிடித்தனர், அதில் “சேட் ஹிஸ்டரி எப்படி டெலிட் செய்வது, லுமினிய பாஸ்பைடு (பொதுவாக ‘சல்போஸ்’ என்று அழைக்கப்படுகிறது) போன்ற நச்சுப் பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் ஆபத்தான விளைவுகள் பற்றி அவர் இணையத்தில் தேடி உள்ளார்..
இந்த ஆதாரங்கள் குறித்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது தான் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனது கணவரின் உடல் ரீதியான உறவில் அதிருப்தி அடைந்தால், அவரைக் கொல்ல முடிவு செய்ததாக அந்த பெண் போலீசாரிடம் கூறினார். ஷாஹித்தின் மார்பில் மூன்று முறை குத்தியதாகவும், சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக பின்னர் தானே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
அந்த பெண் யாருடன் சேட் செய்தார் என்பதை போலீசார் இப்போது விசாரித்து வருகின்றனர்.. கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கத்தி அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த கொலைக்கு பின்னால் உள்ள முழுமையான நோக்கத்தைக் கண்டறிய போலீசார் தொடர்ந்து அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..