சென்னையில் தீவிரமாக பரவும் டெங்கு..!! எந்த ஏரியாவில் அதிகம் தெரியுமா..? நாளுக்கு நாள் எண்ணிக்கை உயர்வதால் பீதி..!

Dengue 2025

தமிழ்நாட்டில் தற்போது ஆங்காங்கே பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிவேகமாகப் பரவி வருகிறது. முன்பு தினசரி பாதிப்பு 10 ஆக இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை உயர்ந்து 60-ஐ கடந்துள்ளது.


பருவமழைக் காலத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்து வரவிருக்கும் இரண்டு மாதங்களில் இந்த நோய்த்தொற்று பாதிப்பு மேலும் இருமடங்காக உயரக்கூடும் என்று பொது சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டெங்கு நோய் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக சென்னை ஸ்டான்லி, ராயப்பேட்டை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் 71 படுக்கைகள் கொண்ட தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகளில் தற்போது 31 பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை மாநகரத்தில் மட்டும் சுமார் 30 பேர் டெங்கு அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் சுமார் 30 பேர் வரை அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருகின்றனர். ஒரு நாளுக்குச் சராசரியாக 60 பேர் வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் அண்ணா நகர், அம்பத்தூர், அடையாறு, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, பெருங்குடி, ராயபுரம் போன்ற பகுதிகளில் டெங்கு பாதிப்புகள் அதிகம் காணப்படுகின்றன.

மழைக்கால நோய்த் தடுப்புப் பணிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த, தேங்கிய நீரை வெளியேற்றுதல், சாலை ஓரங்கள் மற்றும் புதர்கள் போன்ற பகுதிகளில் தினமும் கொசு மருந்துகளைத் தெளித்தல், வீடுகளின் அருகில் கொசுக்கள் பரவ வாய்ப்புள்ள பொருட்களை அப்புறப்படுத்துதல், குப்பைத் தொட்டிகள் மற்றும் பள்ளங்களைச் சுத்தம் செய்தல் போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்தியைத் தடுக்க, மக்கள் தங்கள் வீடுகளின் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேங்கிய நீரில் கொசு மருந்துத் தெளிப்பான்களை உபயோகிப்பது, வீட்டின் அருகே உள்ள குப்பைத் தொட்டிகள் தினமும் சுத்தம் செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது அவசியம்.

மொட்டை மாடிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்வது போன்ற நடவடிக்கைகளையும் பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நோய் பரவல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதால், பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : நட்சத்திர ஓட்டலில் பெண்ணை ரூமுக்கு அழைத்த கும்பல்..!! குடிபோதையில் பாருக்குள் நடந்த கோஷ்டி மோதல்..!! நுங்கம்பாக்கத்தில் பரபரப்பு..!!

CHELLA

Next Post

சியா விதைகள் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது..? அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்..?

Sun Oct 26 , 2025
Who should not eat chia seeds? What happens if you eat too much?
chia seed water for weight loss 624x312 1

You May Like