கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கள்ளக்காதலை தொடர எதிர்ப்பு தெரிவித்த கணவனை கொடூரமாக கொலை செய்ய, உயிர் நண்பனே கூலிப்படையாக செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரம்மபுரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான கிருஷ்ணதாஸ் (36), தனது மனைவி பவித்ராவுடன் வசித்து வந்தார். குழந்தை இல்லாத மன அழுத்தத்தில் இருந்த பவித்ரா, திருவிடைக்கோடு பகுதியில் மெக்கானிக் ஷாப் நடத்தும் கணவரின் நண்பரான ரமேஷுடன் தகாத உறவு வைத்திருந்தார். இந்த விஷயம் கிருஷ்ணதாஸுக்கு தெரியவந்ததும், அவர் மனைவி மற்றும் நண்பன் இருவரையும் கடுமையாக கண்டித்தார். இதன் உச்சகட்டமாக, பவித்ராவின் செல்போனை பறித்து உடைத்துள்ளார்.
மனைவியின் இந்த நிலையை பற்றி ரமேஷிடம் பவித்ரா அழுது கொண்டே புகார் கூறியுள்ளார். இதையடுத்து, ரமேஷ் தனது கள்ளக்காதலிக்கு சாதகமாக செயல்பட்டு, கிருஷ்ணதாஸை தீர்த்துக் கட்டத் திட்டமிட்டார். இதற்காக தனது நண்பர் விமல் என்பவரைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டார்.
இந்த சூழலில், அக்.30ஆம் தேதி இரவு ரமேஷ் தனது உயிர் நண்பன் கிருஷ்ணதாஸுக்கு மது விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதை நம்பி பைக்கில் திருவிடைக்கோடு கொத்திவாரை மலை அடிவாரத்தில் உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு கிருஷ்ணதாஸ் சென்றுள்ளார். அங்கு இருவரும் மது அருந்த வைத்து, போதை தலைக்கேறிய நிலையில் ரமேஷும் விமலும் கிருஷ்ணதாஸை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
கொலைக்குப் பிறகு, “தாசு மயங்கிக் கிடக்கிறார்” என்று ரமேஷ் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து நாடகமாடியுள்ளார். பின்னர், தகவல் அறிந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த கிருஷ்ணதாஸின் உடலை மீட்ட போலீஸார், விசாரணையை தொடங்கினர். பின்னர், ரமேஷ் கேரளாவில் தலைமறைவாக இருந்ததும், அவரது நண்பர் விமலின் தொடர்பும் வெளிப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, கிருஷ்ணதாஸின் இறுதிச் சடங்கில், அவரது மனைவி பவித்ராவும், மாமியார் முத்துலட்சுமியும் கதறி அழுதது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தீவிர விசாரணையில், பவித்ரா தான் கொலையை தூண்டினார் என்பதும், அவரது தாயார் முத்துலட்சுமி கொலையை மறைக்க உடந்தையாக இருந்தார் என்பதும் உறுதியானது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Read More : கொலையை விபத்தாக மாற்றுவது எப்படி..? மாமியாரை எரித்து சாம்பலாக்கிய மருமகள்..!! அடுத்து நடந்த பயங்கரம்..!!



