விமானிகளின் ஓய்வு விதியை வாபஸ் பெற்ற DGCA! இண்டிகோ குழப்பத்திற்கு மத்தியில் புதிய உத்தரவு!

indigo 1

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ தனது நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர்.. இந்த நிலையில் விமானப் பணியாளர்களுக்கான வாராந்திர ஓய்வு குறித்த தனது வழிமுறைகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றது.


தகுதிவாய்ந்த ஆணையத்தின் (CA) ஒப்புதலைத் தொடர்ந்து, முந்தைய உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக விமான ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

இண்டிகோ நெருக்கடி DGCA-வை அதன் அறிவுறுத்தல்களை மறுபரிசீலனை செய்ய கோரியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் டிஜிசிஏ இன்று வெளியிட்ட புதிய உத்தரவில் “நடந்து வரும் செயல்பாட்டு தடங்கல்கள் மற்றும் விமான நிறுவனங்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, செயல்பாடுகள் தொடர்ச்சியாகவும் நிலையாகவும் நடைபெற உறுதி செய்வதற்காக இந்த விதிகளை மறுபரிசீலனை செய்வது தேவையானதாக கருதப்பட்டுள்ளது.. அதனால், வாராந்திர ஓய்வுக்கு மாற்றாக விடுப்பு வழங்கக்கூடாது என்ற முன்பு அறிவிக்கப்பட்ட உத்தரவு உடனடியாக வாபஸ் பெறப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட குழப்பத்துக்குப் பிறகு, அந்த நிறுவனம் விமானிகளின் பணிநேரக் கட்டுப்பாடு (FDTL) விதிகளை தளர்த்தும் டிஜிசிஏவிடம் கோரிக்கை விடுத்தது.. இதை தொடர்ந்து இந்த புதிய உத்தரவை டிஜிசிஏ வெளியிட்டுள்ளது.

IndiGo தினமும் 2,200-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது.. இது ஏர் இந்தியா இயக்கும் எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகம்.. இத்தனை பெரிய எண்ணிக்கையிலான விமானங்களை இயக்கும் நிறுவனத்தில் ஒரு சிறிய திட்டமிடல் தவறு கூட மிகப்பெரிய பிரச்னையாக மாறிவிடும்.

உதாரணமாக: வெறும் 10% தடங்கல் ஏற்பட்டாலே அதாவது 200 முதல் 400 விமானங்கள் பாதிக்கப்படும், இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட நேரிடும்.. அதனால் இண்டிகோவின் பணியாளர் பற்றாக்குறை, திட்டமிடல் குறைபாடு அல்லது திடீர் பிரச்னைகள் பெரிய அளவிலான இடர்பாடுகளை உருவாக்கின.. கடந்த 3 நாட்களில் நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : உஷார்..! வைரலாகும் 19 நிமிட வீடியோ! ஆர்வத்தில் கிளிக் செய்தால் உங்கள் வங்கிக் கணக்கின் மொத்த பணமும் காலி..!

RUPA

Next Post

இரண்டு வாரம் வெந்தய நீரைக் குடித்து வந்தால்.. இந்தப் பிரச்சனை வரவே வராதாம்..!

Fri Dec 5 , 2025
If you drink fenugreek water every day for two weeks, this problem will be completely gone!
fenugreek water 1

You May Like