செங்கல்பட்டு அருகே….! இருளர் சமூக பெண்களுக்கு நீதி கேட்டு காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் குதித்த மக்கள்….!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பாலம்மாள் நகர் பகுதியில் சேர்ந்த படூர் பாலு என்ற மர வியாபாரி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களை கொத்தடிமை தொழிலாளர்களாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.


அதோடு அவர்களை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் 20 பேர் நீக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பான புகாரின் அடிப்படையில், கேளம்பாக்கம் காவல் துறையினர் குற்றம் சுமத்தப்பட்ட பாலு உள்ளிட்டவர்களை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

ஆகவே இவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், மாவட்ட நீதி துறை நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதோடு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்தி மாதர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக செங்கல்பட்டு பகுதியில் க.புருஷோத்தமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மேலும் மாவட்ட சமூக நலத்துறை அலுவலரிடம் மனுவும் வழங்கப்பட்டது.

Next Post

அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து வெளியான குட் நியூஸ்..!! தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்புகள்..!!

Thu Jun 29 , 2023
இந்தியாவிலேயே பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாடுதான் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக அதிகம் செலவு செய்யும் 2-வது மாநிலமாக உள்ளது. இப்போது, ​​14 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களைக் கொண்டு தமிழ்நாடு அரசு பணிகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் அதிக அரசு ஊழியர்கள் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு என்று கடந்த சில நாட்களில் மட்டும் 3 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பு 1 – […]
govt employees leave staff

You May Like