இன்றைய வாழ்க்கை முறையில் பெரும்பாலானோரை அச்சுறுத்தும் ஒரு நோய் என்றால் அது நீரிழிவு நோய் தான். உலகெங்கிலும் லட்சக்கணக்கானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 2023ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கை இந்தியாவில் மட்டும் 10.1 கோடி நீரிழிவு நோயாளிகள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நோய் பெரியவர்களை மட்டுமல்ல, இளைஞர்களையும் அதிகம் பாதிக்கிறது.
நீரிழிவு என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் ஒரு நோய். கணையம் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாதபோது, குளுக்கோஸ் ஆற்றலாக மாற்றப்படாமல் ரத்தத்தில் தேங்கிவிடுகிறது. வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களால் ஏற்படும் டைப் 2 நீரிழிவு நோயை, ஆரோக்கியமான உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்த முடியும். நம் அன்றாட சமையலறையில் பயன்படுத்தும் சில மசாலாக்களே நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் மருந்தாக செயல்படுகின்றன.
பூண்டு : இதில் இன்சுலின் சுரப்பை மேம்படுத்துவதோடு, இன்சுலின் எதிர்ப்பை குறைக்கிறது. இதில் உள்ள கந்தக சேர்மங்கள் இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
இலவங்கப்பட்டை : இன்சுலின் போலவே செயல்பட்டு, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது. தினமும் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை உட்கொள்வது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும்.
வெந்தயம் : இதில் உள்ள நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகளை உடல் உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. வெந்தயத்தை இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரைக் குடிப்பது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
கருமிளகு மற்றும் கடுகு : கருமிளகில் உள்ள பைப்பரின், இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு உதவுகிறது. கடுகில் உள்ள ஆல்பா-லிபோயிக் அமிலம், குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
மஞ்சள் : இதில் குர்குமின் என்ற வேதிப்பொருள், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. வழக்கமாக மஞ்சளை உணவில் சேர்ப்பது, இரத்த சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கும்.
கிராம்பு : இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்தி, நீரிழிவு நோயாளிகளின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற திறனை அதிகரிக்கிறது.
Read More : 3 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..!! தீபாவளிக்கு முன்பே வரப்போகும் அதிர்ஷ்டம்..!!