காமெடி நடிகர் ரோபோ சங்கர் போலவே, 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக வலம் வந்த பொன்னம்பலம். இவர், தற்போது மோசமான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் என பல நட்சத்திரங்களுடன் நடித்தவர், கடந்த சில ஆண்டுகளாக மீடியாவில் இருந்து விலகியே இருந்தார்.
சமீபத்தில் வெளியான தகவல்படி, அவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதை உறுதி செய்துள்ளன. பொன்னம்பலம், ஒரு நேர்காணலில், “அதிகமாக மது அருந்தி என்னை நானே பாழாக்கிக் கொண்டேன். டயாலிசிஸ் செய்வது உலகிலேயே மிக மோசமான தண்டனை. என் எதிரிகளுக்குக்கூட இந்த கஷ்டம் வரக்கூடாது” என்று கூறியிருந்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 750-க்கும் மேற்பட்ட ஊசிகள் தனக்கு போடப்பட்டதாகவும் அவர் கூறினார். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சனைகளும் அவரது சிறுநீரக செயலிழப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் என்ன..?
* சிறுநீர் நுரை அல்லது குமிழ்களாக வருதல்.
* ரத்த சிவப்பணுக்கள் குறைவதால் ஏற்படும் அதிகப்படியான சோர்வு.
* சருமம் வறண்டு, செதில் செதிலாக வருதல்.
* பாதங்கள், கணுக்கால்கள் மற்றும் கண்களைச் சுற்றி வீக்கம்.
* தசைகளில் வலி மற்றும் பிடிப்புகள்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை :
கல்லீரல் செயலிழப்பு கண்டறியப்பட்டதும், ஒரு வருடத்திற்குள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகும், கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது முக்கியம். மருத்துவர் அறிவுறுத்திய மருந்துகளைச் சரியாக எடுத்துக் கொள்வது, குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகள் செய்வது, மது மற்றும் புகைப்பழக்கத்தைத் தவிர்ப்பது போன்றவை அவசியம்.
Read More : கடைசி வரை நிறைவேறாமல் போன ரோபோ சங்கரின் ஆசை..!! மனம் நொந்து போன உலக நாயகன்..!!