டைமண்ட் லீக் இறுதிப்போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், 85.01 மீ., தூரம் ஈட்டி எறிந்து இந்தியா வீரர் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்தார். ஜெர்மனியின் வெப்பர், 90.51 மீ., எறிந்து அபார சாதனையுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தின் சூரிச் நகரில் டைமண்ட் லீக்கின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ஜெர்மனி வீரர் ஜூலியன் வெப்பர், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, ட்ரினிடாட் & டொபாகோ வீரர் கெஷோர் வால்கட், கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஜெர்மனி வீரர் ஜூலியன் வெப்பர், தனது முதல் முயற்சியில் 91.37 மீ., எறிந்தும், 2வது முயற்சியில் 91.51 மீ., எறிந்தும் முன்னிலை பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். நீரஜ் தனது முதல் முயற்சியில், 84.35 மீ., தூரம் எறிந்தார். தொடர்ந்து தனது 2வது முயற்சியில், 82மீ., எறிந்தார்.
ட்ரினிடாட் & டொபாகோ வீரர் கெஷோர் வால்கட், 84.95 மீ., எறிந்ததால், நீரஜ் 3வது இடத்திற்கு பின் தங்கினார். தொடர்ந்து தனது அடுத்த 3 முயற்சிகளிலும், பவுல் செய்த நீரஜ், கடைசி முயற்சியில், 85.01 மீ., தூரம் ஈட்டி எறிந்து 2வது இடம் பிடித்தார். இதனால் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
முன்னதாக, நடைபெற்ற நான்கு டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டிகளில் நீரஜ் சோப்ரா இரண்டில் மட்டுமே பங்கேற்றார். இதில் கடந்த மே மாதம் தோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் அவர் 90.23 மீட்டர் ஈட்டி எறிந்ததுடன், முதன் முறையாக 90 மீட்டர் என்ற இலக்கையும் கடந்திருந்தார். இருப்பினும் அத்தொடரில் அவரால் இரண்டாம் இடம் மட்டுமே பிடிக்க முடிந்தது. ஏனெனில் ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் 91.06 மீட்டர் தூரம் வீசி முதலிடத்தைப் பிடித்திருந்தார்.
அதன் பின் பாரீஸில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் நீரஜ் சோப்ரா 88.16 மீட்டர் தூரம் வீசி முதலிடத்தைப் பிடித்து அசத்தினார். மேலும் அவர் ஜெர்மனியின் ஜூலியன் வெப்பரையும் (87.88 மீ) முதன்முறையாக வீழ்த்தியது மட்டுமின்றி, இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கான இடத்தையும் உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: ஷாக்!. இந்திய நகர்ப்புறங்களில் 40% பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!. தேசிய மகளிர் ஆணையம் ரிப்போர்ட்!