நடிகர் ரஜினி தனது வீட்டுத் தோட்டத்தில் வழுக்கி விட்டதாக கூறி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது 50 ஆண்டுகால திரை வாழ்க்கையில் தனித்தவமான தனது ஸ்டைல் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.. 75 வயதிலும் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான்.. தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பிசியான நடிகராகவும் வலம் வருகிறார்.
வேட்டையன் படத்தை தொடர்ந்து தற்போது கூலி படத்தில் ரஜினி நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த படம் ஆக்ஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது.. இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறி உள்ளது.. இந்த படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார்.. நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார்..
இந்த நிலையில் நடிகர் ரஜினி தனது வீட்டுத் தோட்டத்தில் வழுக்கி விட்டதாக கூறி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரஜினி போல் தோற்றம் உடைய ஒரு நபர், தன் வீட்டு தோட்டத்து நடைபயிற்சி மேற்கொள்கிறார்.. பின்னர் கேட்டை திறந்து நியூஸ் பேப்பரை எடுத்து வரும் அவர், வழுக்கி கீழே விழுகிறார்.. பின்னர் எழுந்து செல்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த சிலர் ரஜினி வழுக்கி விழுந்து விட்டார் என்று தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.. இந்த வீடியோவை பார்த்த பலர் ரஜினி நலமாக இருக்கிறாரா என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். சிலர் அது ரஜினி இல்லை என்று பதிவிட்டு வருகின்றனர்..
உண்மையில், அந்த வீடியோவில் இருப்பது ரஜினியே இல்லை.. அது ரஜினி என்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.. இன்னும் சொல்லப்போனால் ரஜினி தற்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பிசியாக உள்ளதாக கூறப்படுகிறது.. எனவே ரஜினி வழுக்கி விழவில்லை என்பது உறுதியாகி உள்ளது..
Read More : இந்திய சினிமாவில் இதுவே முதன்முறை.. கூலி படத்திற்கு வேற லெவல் புரோமோஷன்.. ரூ.1000 கோடி கன்ஃபார்மா?