நிகிதா கொடுத்தது பொய் புகாரா? அஜித் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்.. சிபிஐ விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்..

Shocking Info Complainant Nikitha in Ajith Death Case Has Fraud History

அஜித் கொலை வழக்கில் புதிய திருப்பமாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன..

கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருட்டு புகாரின் பேரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. மேலும் இந்த வழக்கை சிபிஐ தற்போது விசாரித்து வருகிறது..


இந்த நிலையில் அஜித் கொலை வழக்கில் புதிய திருப்பமாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.. அதன்படி, காரில் இருந்து நகை திருடியதாக நிகிதா கொடுத்தது பொய் புகார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. சிபிஐ விசாரணையில் நிகிதா முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததும் தெரியவந்துள்ளது. கோயிலில் இருந்து கார் எங்குமே செல்லாத நிலையில் அஜித் மீது நிகிதா கொடுத்தது பொய் புகாராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது..

அஜித்குமார் மீது நிகிதா அளித்த புகாரில், நான் கோயிலுக்கு வந்த உடன், அஜித்குமாரிடம் சாவியை கொடுத்துவிட்டு பார்க் பண்ண சொல்லியிருந்தேன்.. கோயிலை விட்டு வெளியே போகும் போது தான் அந்த சாவியை வாங்கிவிட்டு சென்றேன்.. 1 மணி நேரம் அந்த கார் எங்கிருந்தது என்றே தெரியாது..” என்று கூறியிருந்தார்.. ஆனால் காரை யாரும் எடுத்துச்செல்லவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது..

மேலும் நிகிதாவின் காரை ஒருவர் பார்க் செய்யவில்லை என்பதும், இருவர் பார்க்கிங் செய்ததும் தெரியவந்துள்ளது.. நிகிதாவின் காரை அருண் குமார், தினகரன் என்ற இருவர் பார்க் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது..

10 நிமிடங்களுக்கு பிறகே கார் சாவி தன்னிடம் கொடுக்கப்பட்டதாக நிகிதா கூறிய நிலையில், 2 நிமிடங்களிலேயே கார் சாவி அவரிடம் ஒப்படைக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.. மேலும் கார் பார்க்கிங் இடத்தை விட்டு காரே போகாத நிலையில், அந்த இடத்தில் கார் இல்லை என்று நிகிதா கூறியுள்ளார்.. நிகிதாவும், அவரின் தாயாரும் கோயிலுக்குள் வந்த பின் கார் எங்கும் செல்லவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.. கோயிலில் இருந்து நிகிதா காரை எடுத்து செல்லும் காட்சிகள் மட்டுமே பதிவாகி உள்ளது..

ஆனால், தனது காரை வடகரை வரை அஜித்குமாரும், அவரின் நண்பரும் ஓட்டிச்சென்றதாக நிகிதா கூறிய புகாரும் உண்மையில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.. இதன் மூலம் நிகிதா கொடுத்த புகாரில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது.. மேலும் நிகிதா வாங்கிய நகைகள் குறித்தும் சிபிஐ விசாரணையை தொடங்கி உள்ளது.. நிகிதா அந்த நகையை சென்னையில் வாங்கியதாக கூறப்படும் நிலையில், இந்த நகை குறித்தும் சிபிஐ தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.. விசாரணையின் முடிவில் தான் இந்த வழக்கில் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும்..

RUPA

Next Post

ஆபரேஷன் சிந்தூரில் 6 பாக். விமானங்களை இந்தியா அழித்தது - இந்திய விமானப்படைத் தலைவர் பேச்சு..

Sat Aug 9 , 2025
ஆபரேஷன் சிந்தூரின் போது 6 பாக், விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் இன்று தெரிவித்துள்ளார்.. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு, தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்புகள் ஐந்து பாகிஸ்தானிய போர் விமானங்களையும், வான்வழி கண்காணிப்புக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு இராணுவ விமானமான AEW&C/ELINT விமானத்தையும் அழித்ததாகவும் அவர் கூறினார். பெங்களூருவில் நடந்த ஏர் சீஃப் மார்ஷல் எல்.எம். கத்ரே நிகழ்ச்சியில் […]
iaf chief

You May Like