2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது..
இந்த சூழலில் நேற்று முன் தினம், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் தலைவர்களின் சந்திப்பு உற்று நோக்கப்படுகிறது.. இதையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அதிமுக – பாஜக கூட்டணி தொடங்கிவிட்டதாக தகவல் வெளியானது. எனினும் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்று நயினார் கூறியிருந்தார்..
ஆனால் இபிஎஸ் உடனான சந்திப்பின் போது, 70 தொகுதிகள் வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கேட்டதாக கூறப்படுகிறது.. வெற்றி வாய்ப்புள்ள 70 தொகுதிகளின் பட்டியலையும் இபிஎஸ்ஸிடம் நயினார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.. ஆனால், அதனை இபிஎஸ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.. தேர்ந்தெடுத்துள்ள 70 தொகுதிகளில் 50 தொகுதிகளை ஒதுக்க பாஜக தரப்பில் நயினார் கொரியதாகவும் கூறப்படுகிறது.. எனினும் கடந்த தேர்தலில் 20 தொகுதிகள் கொடுத்ததால் இந்த முறை 30 தொகுதிகளை கொடுக்கலாம் என்று இபிஎஸ் கூறியதாகவும் தெரிகிறது..
இந்த நிலையில் இன்று டெல்லி சென்றுள்ள நயினார் நாகேந்தின் பாஜக மேலிடத்தில் இந்த தகவலை தெரிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.. இன்று அமித்ஷாவை சந்திக்கும் அவர், இபிஎஸ் உடனான பேச்சுவார்த்தை குறித்து எடுத்துரைக்க தெரிவிக்க உள்ளாராம்.. வரும் 15-ம் தேதி அமித்ஷா தமிழகம் வர உள்ள நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.. எப்படியும் இந்த முறை அதிமுக கூட்டணியில் அதிக இடங்களையே கேட்டு பெறும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன..
Read More : Flash : காலையிலேயே குட்நியூஸ்..! ஒரே நாளில் ரூ.6,000 குறைந்த வெள்ளி விலை..! இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?



