நேற்று ரூ.640 குறைந்த தங்கம் விலை இன்று குறைந்ததா? உயர்ந்ததா? இன்றைய நிலவரம் இதோ..

gold necklace from collection jewellery by person 1262466 1103

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரு சவரன் ரூ.40 குறைந்து ரூ.74,320 விற்பனை செய்யப்படுகிறது..

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் சுமார் ரூ.2000க்கு மேல் தங்கம் விலை உயர்ந்தது.. ஆனால் இந்த வாரம் மீண்டும் தங்கம் விலை குறைந்தது.. கடந்த 2 நாட்களில் ரூ.1200 குறைந்தது..

இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.9,290-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.40 குறைந்து ரூ.74,320 விற்பனை செய்யப்படுகிறது.. கடந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ.126-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,26,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : EPFO Update : ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. இனி ஏடிஎம்-ல் இருந்து PF பணம் எடுக்கலாம்.. இதுதான் செயல்முறை..!!

English Summary

Gold prices in Chennai fell by Rs. 40 per sovereign today and are being sold at Rs. 74,320.

RUPA

Next Post

மார்பகப் புற்றுநோய்: வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி..? - மருத்துவர்கள் விளக்கம்..

Wed Aug 13 , 2025
Do you have breast cancer? How to check at home? - Doctors explain
breast cancer 1

You May Like