கடந்த வாரம் ரூ.3000 வரை சரிந்த தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? இன்றைய நிலவரம் இதோ..

gold necklace from collection jewellery by person 1262466 1103

சென்னையில் இன்று தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரனுக்கு ரூ.73,280 விற்பனை செய்யப்படுகிறது.

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் தங்கம் விலை சரசரவென குறைந்தது.. இதனால் கடந்த வாரம் மட்டும் சுமார் ரூ.3,000 என்ற அளவுக்கு தங்கம் விலை குறைந்தது..

இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.9,160க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக், ரூ.73,280 விற்பனை செய்யப்படுகிறது. 

அதே போல் இன்று வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.126-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,26,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..! மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…! தமிழக அரசு முடிவு…

English Summary

In Chennai today, gold is being sold at Rs. 73,680 per sovereign, unchanged.

RUPA

Next Post

2 பேர் பலி, 32 பேர் காயம்.. கோயில் கூரை மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்..

Mon Jul 28 , 2025
Two people were killed and 32 injured in a stampede after an electric wire fell on the roof of a temple in Barabanki, Uttar Pradesh.
MixCollage 28 Jul 2025 07 48 AM 4239 2025 07 05fd4d2bbb16a81a96f65d6e65fbaf58 16x9 1

You May Like