2 நாட்களாக ஆட்டம் காட்டி வந்த தங்கம் விலை இன்று உயர்ந்ததா? சரிந்ததா? இன்றைய நிலவரம் இதோ..

gold jewelery

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.97,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் கடந்த வாரத்தில் சுமார் ரூ.4000 வரை விலை குறைந்தது.. இந்த வாரத் தொடக்கத்தில் முன் தினம் ரூ.3,000 விலை குறைந்த நிலையில், பின்னர் மீண்டும் 3000 வரை உயர்ந்தது.. குறிப்பாக காலையில் குறைவதும் மாலையில் அதிரடியாக உயர்வதும் என தங்கம் விலை ஆட்டம் காட்டி வந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி, ஒரு கிராம் ரூ. 11,300க்கு விற்பனையாகிறது.. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90,400-க்கு விற்பனையாகிறது.. அதே போல் இன்று வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ.165க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : குழந்தைகள் உதவி மையத்தில் வேலை.. மாதம் ரூ.21,000 சம்பளம்.. நல்ல வாய்ப்பு.. உடனே விண்ணப்பிங்க..!!

RUPA

Next Post

விடிஞ்சா திருமணம்.. குளியலறையில் மணப்பெண் மர்ம மரணம்.. மாப்பிள்ளை வீட்டில் நடந்த பகீர் சம்பவம்..!!

Fri Oct 31 , 2025
Bride mysteriously dies at groom's house the day before wedding
marriage death

You May Like