உலகம் முழுவதும் ஆங்காங்கே சிலர் திருமணத்தை தாண்டிய கள்ளஉறவு வைத்துள்ளனர். இது ஆண், பெண் என்று இருபாலருக்கும் பொருந்தும். உண்மையில் இது தங்களின் கணவர் மற்றும் மனைவிக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். இதனால் பலரும் கள்ளஉறவை மிகவும் ரகசியமாக வைக்கின்றனர். தகாத உறவு தங்கள் துணைக்கு தெரிய வரும் போது இதனால் ஏற்படும் விளைவுகளும் அதிகம்.. நாட்டில் தகாத உறவால் ஏற்படும் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதேசமயம், பொது இடங்களில் வைத்து தாக்கப்படும் சம்பவங்களும், அது தொடர்பான வீடியோக்களில் இணையத்தில் உலாவி கொண்டு இருப்பதை காண முடிகிறது. அதுபோல ஒரு சம்பவம் தான் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சாலையில் ஒரு பெண் தனது கணவரை அவரது காதலியுடன் கையும் களவுமாக பிடித்துள்ளார்.
தனது கணவர் அவரது காதலியுடன் சாலையில் நடந்து செல்வதை கண்ட மனைவி ஆத்திரமடைந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே அந்த பெண் தனது கணவரின் காதலியை தாக்கினார். சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் மனைவியும் காதலியும் மாறி மாறி மோதிக் கொண்டனர். பின்னர் கணவர் தனது மனைவியை சாலையின் நடுவில் அறைந்தார். இந்த கடுமையான சண்டை கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
Read more: அரசியல் கட்சிகள் ஏ.ஐ. பயன்படுத்தும் போது வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம்…! தேர்தல் ஆணையம் அதிரடி…!



