தமிழ் சினிமாவில் குடும்ப படங்களை எடுப்பதில் பெயர் எடுத்தவர் வி.சேகர். இன்றைக்கும் மக்கள் விரும்பி ரசிக்கும் காமெடி காட்சிகளில் வி. சேகரின் படங்களும் இருக்கின்றன. இந்நிலையில், சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் வடிவேலு கோவை சரளா செய்த சம்பவம் குறித்து இயக்குநர் வி.சேகர் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது: “நான் இயக்கிய ஒரு படத்தில் வடிவேலுவுக்கும் கோவை சரளாவுக்கும் ஜோடி வைத்து கமிட் செய்தேன். அப்போது வடிவேலு என்னிடம் வந்து, ‘எனக்கும் சரளாவுக்கும் தனித்தனி மேக்கப் ரூம் தேவையில்லை, ஒரே ரூமா போடுங்கள். உங்களுக்கு செலவு மிச்சமாகும்’ என்றார். நானும் அது நல்ல யோசனை என்று நினைத்தேன்.
ஆனால் அவர்கள் இருவரும் உள்ளே சென்றதும் கதவை பூட்டிக்கொண்டார்கள். இதை பார்த்த என் உதவி இயக்குநர் என்கிட்ட வந்து சொன்னதும், மேக்கப் போட போயிருப்பாங்க ஏன் டிஸ்டர்ப் பன்ற என்றேன். இல்லை சார் ரொம்ப நேரமா கதவு மூடியே இருக்கு, கதவை தட்டினாலும் திறக்க மாட்டேங்குறாங்க என்றதும், நான் டென்ஷன் ஆகி இந்த படத்தில் கோவை சரளா நடிக்க வேண்டிய அவசியமே இல்லை என துரத்தி விட்டேன்.
அதுக்கு அப்புறம் வடிவேலு, கோவை சரளா காம்போவில் படம் பண்ணவே இல்லை என வி.சேகர் தெரிவித்தார். வடிவேலு – கோவை சரளா ஜோடி, வரவு எட்டணா செலவு பத்தணா, நான் பெத்த மகனே உள்ளிட்ட ஏராளமான படங்களில் இணைந்து நடித்துப் பல ஹிட் காமெடி சீன்களை கொடுத்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் மாரீசன் திரைப்படத்தில் ஜோடியாக இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.