உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஏனென்றால், ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன. பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்தார். ஆனால் பார்வை பறிபோன பிறகு, அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர் இறப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளில் எழுதினார்.
அவர் போர்கள், அரசியல் மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளைப் பற்றி கூறியது பல முறை உண்மையாகியுள்ளது. அந்த வகையில் அவரின் அடுத்தடுத்த பயங்கரமாக கணிப்புகள் பலரையும் நடுங்க செய்கிறது. அந்தவகையில் சமீபத்தில் ரஷ்யா, ஜாப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி நிகழ்வை அவர் முன்னரே கணித்திருந்தார். இந்த கணிப்பும் உண்மையானதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்தநிலையில் இரட்டை நெருப்பு பற்றிய பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு தற்போது பேசுப்பொருளாகியுள்ளது. Made in Vilnius செய்தி நிறுவனத்தின்படி, பல்கேரிய ஆன்மீகவாதி பாபா வங்கா ஆகஸ்ட் மாதத்தில் “வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் ஒரே நேரத்தில் இரட்டை நெருப்புகள் எழும் என்று கணித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. “அந்த வார்த்தையின் அர்த்தம் தெளிவாக இல்லாவிட்டாலும், அதனைச் சுற்றி பல்வேறு ஊகங்கள் மற்றும் விவாதங்கள் நிலவுகின்றன.”
சிலர் இந்த நெருப்பு காட்டுத்தீ அல்லது எரிமலை வெடிப்புகளைக் குறிக்கலாம் என்று நம்புகிறார்கள் என்று அந்த செய்தித்தாள் கூறியது. மற்றவர்கள் ஒரு சிறுகோள் அல்லது விண்கல் பூமியைத் தாக்கக்கூடும் என்று கூறுகின்றனர். மற்றொரு கணிப்பில், மனிதகுலம், தாங்கள் அறிய விரும்பாத ஒரு விஷயத்தை, ஆகஸ்ட் மாதத்தில் அறிந்து கொள்ளும் நிலைக்கு அருகிலாக செல்வார்கள் என கூறப்பட்டுள்ளது. அதன் பொருள் தெளிவாக இல்லாதபோதிலும், “ஒருமுறை திறக்கப்பட்டதை மீண்டும் மூட முடியாது” என்று பாபா வங்கா எச்சரித்தார். இந்த கணிப்பு மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது, பலர் இது உயிரி தொழில்நுட்ப முன்னேற்றம் அல்லது செயற்கை நுண்ணறிவு பற்றியதாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
ஆகஸ்ட் மாதத்தில் ‘அரசியல் சரிவு’: “ஒன்றுபட்ட கை இரண்டாக உடைக்கப்படும், ஒவ்வொன்றும் அதன் சொந்த வழியில் செல்லும்.” இது நேட்டோ (NATO) அல்லது யூரோப்பிய ஒன்றியம் (EU) போன்ற கூட்டமைப்புகளில் உருவாகும் அரசியல் பதற்றங்களை குறிக்கிறதா என்று சிலர் கருதுகின்றனர். இது சில உறுப்பினர்களைப் பிரிக்க அல்லது திரும்பப் பெற வழிவகுக்கிறது. மற்றவர்கள் இது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் பதட்டங்களைக் குறிக்கலாம் என்று நம்புகிறார்கள்.
மறுபுறம், இயற்கை பேரழிவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள், ஐரோப்பாவில் மக்கள் தொகை குறைவு மற்றும் 2025 இல் வேற்றுகிரகவாசிகளுடனான தொடர்பு சாத்தியமாகும் என்றும் அவர் கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த மாணவன்..! விசாரணையில் அதிர்ச்சி