சமையல் தொடர்பாக மாமியாருடன் ஏற்பட்ட தகராறு.. EX. IT ஊழியர் தற்கொலை..! பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்..!

Bengaluru ex techie suicide

தனது வீட்டில் குடும்பத் தகராறு காரணமாக 35 வயது பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அத்ரிச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.. உயிரிழந்த பெண் 35 வயது சுஷ்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் டெல் (Dell) என்ற ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.


அவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு புனித் குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ளார். வீட்டில் அடிக்கடி சிறு பிரச்சினைகள் தொடர்பாக வாக்குவாதம் நடந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

நேற்று சுஷ்மாவுக்கும் அவரது மாமியார் கல்பனாவுக்கும் இடையே உணவு சமைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கல்பனா தன்னை சமைக்க அனுமதிக்கவில்லை என்றும், பல்வேறு விஷயங்களுக்காக தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும் சுஷ்மாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த சுஷ்மா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

கணவரின் தரப்பில் வரதட்சணை கொடுமை இருப்பதாக சுஷ்மாவின் குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து, அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர், அதே நேரத்தில் மாமியாரைத் தேடும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Read More : மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA பரிசோதனை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி..! ஜாய் கிரிசில்டா தொடர்பான வழக்கில் உத்தரவு..

RUPA

Next Post

மிகுந்த வேதனை அடைந்தேன்.. கார் விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Wed Mar 4 , 2026
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தில் காருடன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தில் நேற்று (03.03.2026) காலை சுமார் 08.30 மணியளவில் புதுவை – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் TN10 BE 8935 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை […]
tamilnadu cm mk stalin

You May Like