fbpx

குறைந்த வட்டியில் ரூ.10 லட்சம் கடனுதவி..!! யார் யார் விண்ணப்பிக்கலாம்..? ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..!!

சிறுபான்மையினர் கைவினைக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடனுதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர் கைவினைக் கலைஞர்களுக்கு விராசத் திட்டம் (VIRASAT) (Handloom & Handicraft) கடனுதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையின இனத்தைச் சார்ந்தவர்களான முஸ்லீம், கிறித்தவர், ஜெயின், சீக்கியர், பார்சி, புத்தமதத்தைச் சார்ந்த கைவினைக் கலைஞர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான மூலதனப் பொருட்களை வாங்கி தங்களது தொழிலில் முன்னேற்றம் அடைந்திட உதவிடும் வகையில், கடனுதவி வழங்கப்படவுள்ளது.

குறைந்த வட்டியில் ரூ.10 லட்சம் கடனுதவி..!! யார் யார் விண்ணப்பிக்கலாம்..? ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..!!

இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்பும் சிறுபான்மையின கைவினைக் கலைஞர்கள் திட்டம் 1-ன் கீழ் குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000/-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம் 1-ன் கீழ் ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டி விகதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- வரையிலும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 6%, பெண்களுக்கு 5% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- வரை வழங்கப்படுகிறது. மேற்கண்ட திட்டத்தின்கீழ் பெறப்படும் கடனை 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

குறைந்த வட்டியில் ரூ.10 லட்சம் கடனுதவி..!! யார் யார் விண்ணப்பிக்கலாம்..? ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..!!

மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இக்கழகத்தின் மூலம் வழங்கப்படும் கடனுதவி விண்ணப்பங்கள் மற்றும் இதர கடனுதவி விவரங்களை https://tamco.tn.gov.in/ என்ற இணையதள முகவரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகள் ஆகியவற்றில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தென்னை மரம் ஏறுவோர் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்...! முழு விவரம் இதோ...!

Fri Dec 2 , 2022
தென்னை மரம் ஏறுவோருக்காக நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கேரா சுரக்ஷா காப்பீட்டுத் திட்டத்தை தென்னை வளர்ச்சி வாரியம் அமல்படுத்தி வருகிறது.இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விபத்து ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் ரூ.1 லட்சம் வழங்கப்படும். பயிற்சி பெறுபவர் அனைவருக்கும் பயிற்சியாளர்களுக்கும் ஒரு வருட இலவச காப்பீட்டுத் தொகையை தென்னை வளர்ச்சி வாரியம் வழங்க […]

You May Like