fbpx

கால்நடை மருத்துவ மாணவிகள் 2 பேர் விடுதியில் தற்கொலை முயற்சி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

வேப்பேரியில் கால்நடை மருத்துவ மாணவிகள் இருவர், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேப்பேரியில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி உள்ளது. மாணவ-மாணவிகள் தங்கி படிக்க தனித்தனியே விடுதி வசதியும் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் இங்கு தங்கி கால்நடை மருத்துவ படிப்புகளை படித்து வருகின்றனர். இந்த நிலையில், விடுதியில் நேற்றிரவு 2 மாணவிகள் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளனர். இதை பார்த்த சக மாணவிகள் விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, மயங்கிய மாணவிகள் இருவரும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், உணவில் விஷம் கலந்து குடித்தது தெரியவந்தது.

கால்நடை மருத்துவ மாணவிகள் 2 பேர் விடுதியில் தற்கொலை முயற்சி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

‘சல்பைடு’ ஆசிட் என்ற திரவத்தை இரவு உணவில் கலந்து சாப்பிட்டதால் மாணவிகள் இருவரும் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பெரியமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தற்கொலைக்கு முயன்ற 2 மாணவிகளும் தோழிகள். ஆனால், அவர்கள் எதற்காக இந்த முடிவை மேற்கொண்டார்கள் என்ற விவரத்தை கூற விரும்பவில்லை. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்த முயன்றபோது அவர்களுக்கு எவ்வித தகவலையும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. மாணவிகள் இருவரும் நலமுடன் இருப்பதால் விடுதிக்கு விரைவில் திரும்புவதாக கல்லூரி தரப்பில் தெரிவித்தனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் மற்றும் விடுதி வார்டன் ஆகியோர் மற்ற மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை மறைப்பதற்கு.. மத்திய அரசை குறை சொல்வதா..?அண்ணாமலை..!

Thu Aug 4 , 2022
சென்னை, தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத்தொகை அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது என பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியார்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது பின்வருமாறு, தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை அனைத்தும் வழங்கப்பட்டு விட்டது. எனவே திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை என்பதை மறைப்பதற்கு மத்திய அரசை குறை சொல்னால் எப்படி?. ஒன்பது கோடி பேர் பயண்டுத்தும் உஜ்வாலா […]
’இரண்டு நாட்களில் இரண்டு லாக்கப் மரணங்கள்’..! அண்ணாமலை பரபரப்பு ட்வீட்..!

You May Like