மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண்குழந்தைகளை விட்டு விட்டு தாய் மாயமான சோகமான சம்பவம் நடந்துள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த அக்டோபர் மாதம் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த 20ம் தேதி பிரசவலியால் மகப்பேறு பிரிவுக்கு மாற்றப்பட்டார். பின்னர் சில மணி நேரத்திலேயே அவர் 3 குழந்தைகளை பெற்றெடுத்தார். பிறந்து 3 குழந்தைகளுமே பெண் குழந்தைகள். இதனால் அந்தப் பெண் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
இருப்பினும் அந்த குழந்தைகள் மூன்றும் எடை குறைவாக இருந்துள்ளது. பராமரிக்கவும் முடியாத ஒரு சூழ்நிலையில் மருத்துவமனையின் முதல்வர் வள்ளி என்பவரிடம் ’’ என்னால்இந்த 3 குழந்தைகளையும் வளர்க்க முடியாது. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் ’’ என தாய் கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அவருக்கு அறிவுரை கூறி உள்ளார். இருந்தபோதிலும் அவர் முடிவு தெளிவாக இருந்துள்ளது. எனக்கு வளர்க்க போதிய அளவுக்கு பொருளாதாரம் இல்லை என்பதை தெரிவித்துள்ளார்.
ஆனால்இதற்கு மறுப்பு தெரிவித்ததால்அந்த பெண் 3 குழந்தைகளையும் விட்டுவிட்டு மாயமானார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் குழந்தைகள் இன்குபெட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது சிகிச்சைக்குப் பின்னர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைத்தனர்.