மரக்காணம் அருகே கணவரை பிரிந்து இருந்த நேரத்தில் ஏற்பட்ட காதலால் தைலமரக்காட்டிற்கு சென்றபோது கொடூரமான சம்பவம் நேர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் 40 வயது மதிக்கத்தக்க பெண். அவர் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து தனிமையில்தனது மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். கோட்டக்குப்பம் சின்னமுதலியார் சாவடி பகுதியில் லாட்ஜில் ஊழியராக வேலை செய்து பிழைப்பை நடத்தி வருகின்றார்.
இவருக்கும் புதுச்சேரி காலாப்பட்டு என்ற பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி வெளியில் சந்தித்துக் கொண்டு உல்லாசமாக இருந்துள்ளனர். அதே போல தைலமரக்காட்டிற்குள் சென்று உல்லாசமாக இருக்க நினைத்தனர். ஆனால் அந்த பகுதியில் 3 பேர் வந்து அவர்களுக்கு இடையூறு அளித்தனர். முதலில் கொன்றுவிடுவோம் என மிரட்டினர். இதனால்இருவரும் தப்பித்து ஓடியுள்ளனர். காதலன் தெறித்து ஓடிவிட்டநிலையில் இந்த பெண்ணால் ஓட முடியவில்லை.
தைலமரக்காட்டிற்குள் தன்னந்தனியாக 3 பேரிடமும் சிக்கிக் கொண்டார் அந்த பெண். அவரை 3 பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதை வெளியில் சொன்னால் உன் 3 மகள்களின் கதையும் அவ்வளவுதான் என மிரட்டியுள்ளனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதை பல நாள் வெளியில் சொல்லாமல் இருந்த நிலையில் எப்போதெல்லாம் அந்த நபர்கள் இந்த பெண்ணை பார்க்கின்றார்களோ அடிக்கடி தனிமையில் வரவழைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.
ஒருகட்டத்தில் பணம் கேட்டும் தொல்லை கொடுத்துள்ளனர். பணம் இல்லை என்பதால் தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்து முயற்சி எடுத்தபோது தனது 3 பிள்ளைகளின் நிலையையும் யோசித்து முடிவை கைவிட்டார். இதனிடையே அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதுமட்டும் இன்றி வீடியோவை இன்டெர்னெட்டில் போட்டுள்ளனர்.
இது பற்றி போலீசில் புகார் அளிக்க வேண்டும் என நினைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்தை தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் எழில், பரதன் உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் தப்பித்து ஓடிய கள்ளக்காதலன் அன்று முதல் திரும்பி வரவேயில்லை என பெண் தெரிவித்துள்ளார்.