fbpx

ஆசிட் கலந்த குளிர்பானம்..!! செயலிழந்த சிறுநீரகம்..!! சிறுவன் உயிரிழந்த சோகம்..!!

ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அஸ்வின் (11) தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24ஆம் தேதி பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்தார் அஸ்வின். இந்நிலையில், அஸ்வினுக்கு அடுத்த நாளான 25ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அவரது தாயார் ஷோபியா களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அஸ்வினை அழைத்துச் சென்றுள்ளார். தொடர்ந்து மாணவன் அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, கேரள மாநிலம் நெய்யாற்றங்கரை பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஆசிட் கலந்த குளிர்பானம்..!! செயலிழந்த சிறுநீரகம்..!! சிறுவன் உயிரிழந்த சோகம்..!!

மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவன் அஸ்வின் ஆசிட் திரவம் உட்கொண்டதாகவும், அதனால் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின் அடிப்படையில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடந்த இரண்டு நாட்களாக சிறுவனின் உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டு மிகவும் மோசமடைந்த நிலையில், சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் நெய்யாற்றங்கரை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

இந்தாண்டில் 1.5 லட்சம் பேரை பணிக்கு அமர்த்திய பிரபல ஐடி நிறுவனங்கள்..!! ’ஆனா இலக்கை இன்னும் தொடல’..!!

Tue Oct 18 , 2022
Infosys, Wipro, TCS, HCL ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் 1,05,000 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளன. முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் மற்றும் ஹெசிஎல் ஆகியவை இந்த ஆண்டில் இதுவரை 1,05,000 புதியவர்களை பணியமர்த்தியுள்ளன. இந்த நிதியாண்டின் இறுதிக்குள், இந்த நிறுவனங்கள் மொத்தம் 1.57 லட்சம் பேரை பணிக்கு அமர்த்த வாய்ப்புள்ளது. ஆனால், இந்த ஆண்டு பணியமர்த்தல் 30% க்கும் அதிகமாக வீழ்ச்சியடையும். மார்ச் […]
ஷாக் நியூஸ்..!! 50 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கிய முன்னணி ஐடி நிறுவனங்கள்..!!

You May Like