ராணிப்பேட்டையில் மதுபோதையில் தகராறு செய்த கணவனை அறிவாள்மனையால் மனைவி வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஒழுகூர் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ஏழுமலை. இவரது மனைவி கலைச்செல்வி. கட்டிட தொழிலாளியான ஏழுமலை, நாள்தோறும் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கலைச்செல்வி மாந்தாங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார். இந்தநிலையில், நடத்தையில் சந்தேகப்பட்டு கலைச்செல்வியிடம் தினந்தோறும் கணவர் பிரச்சனை செய்துவந்துள்ளார். வழக்கபோல், மதுபோதையில் இருந்த ஏழுமலை கலைச்செல்வியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலைச்செல்வி, அறிவாள்மனையால் ஏழுமலையை வெட்டியதாகவும், இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாகவும் தெரிகிறது.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார், உயிரிழந்த ஏழுமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து மனைவியை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.