fbpx

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்..!! தாயின் கள்ளக்காதலனால் நேர்ந்த சோகம்..!! திடுக்கிடும் தகவல்..!!

பூந்தமல்லி அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம், மேட்டுத் தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி (40). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். அதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் அம்சவல்லி வேலை செய்து வருகிறார். இவருக்கு சங்கீதா (18) என்ற மகள் இருந்தார். கடந்த சில மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த ராஜு (38) என்பவருடன் அம்சவல்லி கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாகவும், இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன் அம்சவல்லியின் மகள் சங்கீதா தாயுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். இவர்கள் வசிக்கும் வீட்டுக்கு 2 சாவிகள் இருந்துள்ளன. ஒரு சாவி அம்சவல்லியிடமும், மற்றொரு சாவி ராஜுவிடமும் இருந்துள்ளது.

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்..!! தாயின் கள்ளக்காதலனால் நேர்ந்த சோகம்..!! திடுக்கிடும் தகவல்..!!

இந்நிலையில், சம்பவத்தன்று அம்சவல்லி வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சங்கீதா மட்டும் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து, அம்சவல்லி மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது, வெளிப்பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந்தது. தன்னிடம் உள்ள சாவி மூலம் அம்சவல்லி திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு படுக்கை அறையில் சங்கீதா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அம்சவல்லி அதிர்ச்சி அடைந்தார். அவர் அணிந்திருந்த தங்க கம்மல், கொலுசு மற்றும் பணம் திருடுபோயிருப்பது தெரியவந்தது.

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்..!! தாயின் கள்ளக்காதலனால் நேர்ந்த சோகம்..!! திடுக்கிடும் தகவல்..!!

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சங்கீதாவின் சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், கணவரை பிரிந்து வாழ்ந்த அம்சவல்லிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜு (38) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன் மகள் சங்கீதா தனது தாயுடன் சேர்ந்து வாழ வந்திருக்கிறார். அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, அம்சவல்லி வேலைக்கு சென்றதை அறிந்து, கள்ளக்காதலன் ராஜு வீட்டுக்கு வந்து, அவரது மகள் சங்கீதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவரது கொலுசு, கம்மல், பணத்தை திருடி சென்றுள்ளார். மேலும், சங்கீதா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

தலைமறைவாக உள்ள ராஜுவுக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அவர் அப்பகுதியில் மன்மத ராசாவாக வலம் வந்ததாகவும் தெரியவந்துள்ளது. சங்கீதாவை தாயின் கள்ளக்காதலன் ராஜு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தாரா? நகை, பணத்துக்காக கொலை செய்துள்ளாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர். ர்.

Chella

Next Post

இன்று முதல்.. மீனவர்களுக்கு அனுமதி.. ஆனால், ஒரு கண்டிஷன்.!

Mon Nov 14 , 2022
இன்று முதல் கடலூர் மாவட்டத்தில் மீனவர்களுக்கு மீன் பிடிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான மீனவர்கள் கடலூர் மாவட்டத்தில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். அங்கிருக்கும் மீன்பிடி துறைமுகங்களில் அன்றாட ம் விசைப்படகுகளின் மூலம் கடலுக்குச் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருவார்கள். இத்தகைய சூழலில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடந்த நவம்பர் 9ஆம் தேதியிலிருந்து மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மீனவர்கள் கடலுக்குள் சென்று […]
ஜாமீன் வேண்டுமென்றால் ரூ.1 கோடி செலுத்த வேண்டும்..! தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

You May Like