காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் கொடுத்து சென்றபின், நடிகை திவ்யா வீட்டின் கதவை நள்ளிரவில் அச்சுறுத்தும் விதமாக தட்டிய சீரியல் ஹீரோவால், போலீசார் தூக்கத்தை தொலைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சின்னத்திரை நடிகர்களான அர்ணவ் – திவ்யா காதல் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட மன கசப்பில் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்த நிலையில், போரூர் அனைத்து மகளிர் போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை திவ்யா சிகிச்சைக்கு பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து காவல் ஆணையர் அலுவலகம் வந்து, நடிகர் அர்ணவ் மீது புகார் அளித்தார். பின்னர், திருவேற்காடு வட நூம்பல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அதே வீட்டில் தனி அறையில் அர்ணவ் வசித்து வந்தார். போலீசில் புகார் அளித்த பின்னர் கூட இருவரும் ஒரே வீட்டில் தனி தனி அறைகளில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
![நள்ளிரவில் திவ்யா வீட்டின் கதவை எட்டி உதைத்த அர்ணவ்..!! இதுக்குத்தான் இந்த அலப்பறையா..?](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/Arnav.jpg)
இந்நிலையில், புதன்கிழமை இரவு திவ்யா தான் தங்கி இருந்த அறை கதவை உள்பக்கமாக தாழிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு வேலையில் இருட்டுக்குள் சென்ற அர்ணவ், திவ்யாவின் அறை கதவை பலமாக தட்டி உள்ளார். கதவு திறக்கப்படாத ஆத்திரத்தில் அர்ணவ் எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், பயந்துபோன திவ்யா, உடனே போலீசுக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.
![நள்ளிரவில் திவ்யா வீட்டின் கதவை எட்டி உதைத்த அர்ணவ்..!! இதுக்குத்தான் இந்த அலப்பறையா..?](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/Arnav-1.jpg)
இதையடுத்து, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, திருவேற்காடு காவல் நிலையத்திற்கு கொடுக்கப்பட்ட தகவலையடுத்து, இரவு நேர ரோந்து போலீசார், திவ்யாவின் வீட்டிற்கு விரைந்தனர். தன்னை தேடி போலீசார் வந்திருப்பதை அறிந்த அர்ணவ், காலையில் நான் ஜிம்முக்கு போகனும், அதற்கான உடையும், பேஸ்ட் பிரஷ் போன்றவற்றை எடுக்கவே, கதவை தட்டியதாக கூறி சமாளித்துள்ளார். விடிந்த பின்னர் இவற்றை கேட்டு வாங்கி இருக்கலாமே? உங்க ரெண்டு பேருக்கும் தகராறு இருக்கும் நிலையில், நள்ளிரவில் இருட்டுக்குள்ள என்னப்பா வேலை? என்று சத்தம் போட்ட போலீசார், திவ்யாவின் அறையில் இருந்த அர்ணவ்வின் உடமைகளை எடுத்து கொடுத்ததோடு, இது போன்று வீண் வம்புகள் எல்லாம் செய்யக்கூடாது என்று எச்சரித்துச் சென்றனர்.