fbpx

உஷார்..!! தங்க முலாம் பூசப்பட்ட நகைகள்..!! ரூ.22 லட்சம் வரை பண மோசடி..!! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

சென்னை என்எஸ்சி போஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஹர்சல் சிவாஜி (33). இவர் கடந்த 2020இல் 332 கிராம் தங்க நகைகளை, ஐடிபிஐ வங்கியில் அடமானம் வைத்து ரூ.22 லட்சம் பணத்தை கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக நகைக்கு வட்டி கட்டாமலும் நகையை மீட்காததாலும் கடந்த நவம்பர் மாதம் நகைகளை ஏலம் விடுவதற்காக வங்கி அதிகாரிகள் நகைகளை சோதனை செய்துள்ளனர். அப்போது அவை தங்க முலாம் பூசப்பட்ட போலியான நகைகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் வங்கி அதிகாரிகள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இந்நபர் ஏற்கனவே இதேபோல மணப்புரம் கோல்டு லோனில் போலி தங்க நகைகளை வைத்து ரூ.18 லட்சம் வரை பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் கைதானவர் என்பவர் தெரியவந்துள்ளது. இவரின் பெயர், சிவாஜி ஹைர்சல். இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, வங்கியின் நகை மதிப்பீட்டாளரான ஹைரிபிரசாத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Chella

Next Post

”இனிமே நீங்க தான் எனக்கு பாஸ்”..!! காப்பாற்றியவரை விட்டு விலக மறுத்த பூனை..!! துருக்கியில் நெகிழ்ச்சி சம்பவம்..!!

Sun Feb 19 , 2023
துருக்கி, சிரியாவில் கடந்த 6ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துவிட்டது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் மீட்கும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு அலி காகாஸ் என்ற மீட்புக் குழு உறுப்பினர், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த பூனை ஒன்றை உயிருடன் காப்பாற்றியுள்ளார். நன்றியுள்ள அந்த பூனையோ காப்பாற்றிய அலி காகாஸை விட்டு விலக மறுத்ததோடு, அவருடனேயே பயணிக்கவும் துவங்கியுள்ளது. இதனால் […]

You May Like