தமிழகத்தில் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியில் வருகின்ற டிசம்பர் 9ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் டிவிஎஸ் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் டிசம்பர் 9ஆம் தேதி அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளங்கலை பட்டம் முடித்த மாணவர்கள் பங்கேற்கலாம். இதில், கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தங்களின் சுயவிவரக் குறிப்பை பதிவேற்றம் செய்ய வேண்டும். நேர்காணலுக்கு வரும் மாணவர்கள் தங்களின் சுயவிவர குறிப்பு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ் மற்றும் ஆதார அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.