வெளிநாடு சென்ற கணவர் மீண்டும் ஊருக்கே வந்ததால் கள்ளக்காதலனுடன் உறவை தொடர முடியாத விரக்தியில் கள்ளக்காதலுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அடுத்த கடியபட்டணம் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியநாதன் என்பவர், அதே ஊரைச் சேர்ந்த சகாய சாமினி என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. சகாய சாமிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்திருக்கிறார். இதனால் சகாய சாமினிக்கும் ஆரோக்கியநாதனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது நாளடைவில் கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. கணவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்தை கள்ளக்காதலனுக்கு வாரி வழங்கியிருக்கிறார் சகாயசாமினி. அதை வைத்து கார், வேன் வாங்கி சம்பாதித்து தொழில் செய்து வந்திருக்கிறார் ஆரோக்கியநாதன்.
இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் ஊராருக்கு தெரியவரவே, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்றிருக்கிறார்கள். ஆனால், சில தினங்களுக்கு பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கிறார் சகாய சாமினி. அவரின் கணவரும் இதை மன்னித்து சகாய சாமினியை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில், கணவர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி விட்டதால் இனி கள்ளக்காதலனுடன் உறவை தொடர முடியாது என்று மனம் வருந்திய அந்தப் பெண் மீண்டும் வீட்டை விட்டு கள்ளக்காதனுடன் சென்றிருக்கிறார். இந்த முறை தனது இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். காரில் மகன்களுக்கு சாப்பாடு கொடுத்து தூங்க வைத்துவிட்டு, பின்னர் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரது சடலங்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.