fbpx

எச்சரிக்கை!!! இரவு முழுவதும் செல்போன் சார்ஜ் போட்டதால் நேர்ந்த விபரீதம்..

திண்டுக்கல் மாவட்டம் இடையக்கோட்டை அருகே உள்ள இளந்தாரியூரை சேர்ந்தவர் 27 வயதான சந்துரு. விவசாயம் செய்து வருகிறார். இவர் வீட்டிற்க்கு, இவரது உறவினர்களான திருப்பூர் மாவட்டம் உருதுமலைப்பட்டியை சேர்ந்த 57 பழனிசாமி மற்றும் தண்டிக்காரபாளையத்தைச் சேர்ந்த 66 வயதான வேலுச்சாமி ஆகியோர் வந்துள்ளனர். சம்பவத்தன்று இரவு, 3 பேரும் சந்துருவின் வீட்டில் தூங்கியுள்ளனர். தூங்கும்போது, சந்துரு தனது செல்போனை அருகில் உள்ள ‘பிளக் போர்டில்’ சார்ஜ் போட்டிருந்துள்ளார்.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக நேற்று காலை அவரது செல்போன் வெடித்து சிதறியுள்ளது. வெடிக்கும்போது, செல்போனில் இருந்து வெளியேறிய தீப்பொறி அருகில் தூங்கி கொண்டிருந்த சந்துரு, மற்றும் அவரது உறவினர்களின் மீது பட்டுள்ளது. இதனால், அவர்களின் உடலில் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்நிலையில், 3 பேரும் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், சந்துருவின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அங்கு சந்துரு, பழனிசாமி, வேலுச்சாமி ஆகியோர் மீது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனே ஒரு போர்வையால் தீயை அணைத்து, 3 பேரையும் சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகிறார்.

முதற்கட்ட விசாரணையில், சந்துரு செல்போனை இரவு முழுவதும் சார்ஜ் போட்டதால், மின்னழுத்தம் அதிகமாகி செல்போன் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில், தீப்பொறி பறந்து 3 பேரின் துணிகள் மீது பட்டு தீப்பிடித்தது தெரியவந்துள்ளது.

Maha

Next Post

இந்தியாவில் முதன்முறையாக அறிமுகமான கியா கேரன்ஸ் எக்ஸ் லைன்...! முழு விவரம் உள்ளே....!

Wed Oct 11 , 2023
கியா நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக கியா கேரன்ஸ்  எக்ஸ் லைன் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த கார் 18.95லட்சம் முதல் 19.44 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் இரண்டு பிரிவுகளில் கிடைப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த கார் எம்.பி.வி மாடல்களில் தனித்துவமாக திகழ்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த காரின் வெளிப்புற தோற்றத்தை பார்த்த உடனே பார்ப்பவர்களின் கண்களை கவரும் விதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதே பிரிவை சார்ந்த […]

You May Like