fbpx

சம்பா சாகுபடிக்கு பயிர்காப்பீடு .. திருவாரூர் விவசாயிகளுக்கு முக்கிய தகவல்…

விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான காப்பீடு சய்வதற்கு அடுத்தமாதம் 15ம் தேதிக்குள் விவரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது ஒன்றை லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத இறுதிக்குள்ளாக ஒட்டு மொத்தமாக சம்பா சாகுபடி செய்து முடிக்கப்படும். நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு மூலமாக இந்த சம்பா சாகுபடி திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது..

இந்த நிலையில் மழையின் காரணமாக அல்லது வேறு ஏதேனும் பாதிப்பின் காரணமாக சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டால் விவசாயிகள் உரிய இழப்பீடு பெறுவதற்கு ஏற்றவாறு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் உடனடியாக அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

முக்கியமாக விவசாயிகள் தங்கள் செய்யக்கூடிய சம்பா சாகுபடி குறித்த விவரங்களை உண்மையாக பதிவு செய்ய வேண்டும் என்றும், ஒரே சர்வே எண்ணில் பல விவசாயிகள் பதிவு செய்திருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது என்றும், மேலும் விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான தாங்கள் செய்யக்கூடிய சம்பா சாகுபடி பரப்பை அதிகரித்து காட்டாமல் உண்மையான நிலவரத்தை பதிவு செய்து காப்பீடு செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். ஆகவே விவசாயிகள் விரைந்து பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என விவசாயிகளிடம் அறிக்கை வாயிலாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சம்பா நெல் சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றுக்கு 513 ரூபாய் பிரிமியம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியாளரின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா அடங்கள் வாங்கி சரியான முறையில் இ சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர் காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் மூலம் சம்பா சாகுபடியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய இழப்பீடு தொகையை விவசாயிகள் பெறலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் கடைசி நேரத்தில் ஒட்டு மொத்தமாக காப்பீடு செய்ய முற்பட்டு அதனால் ஏற்பட்டும் இடையூறுகளை தவிர்ப்பதற்காக முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Post

கேள்விக்கு பதிலளிக்காத மாணவன்..!! ஆத்திரத்தில் ஆசிரியர் அடித்ததால் வெடித்து சிதறிய நரம்பு..!!

Tue Oct 11 , 2022
ஆசிரியர் கொடூரமாக தாக்கியதால், சிறுவனின் தலையில் மூன்று நரம்புகள் வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம் புத்தா நகரின் பாம்பாவாட்- மஹாவத் சாலையில் கேப்டன் சன்வாலியா பப்ளிக் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சோரன் என்ற ஆசிரியர் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். இந்நிலையில், தேர்வு நெருங்கிவருவதால் மாணவர்கள் நன்றாக படித்துவர வேண்டும் என்றும், மறுநாள் அனைத்து கேள்விகளுக்கும் […]

You May Like