திருவள்ளூர் மாவட்டம்தோக்கமூர் என்ற கிராமத்தில் கட்டப்பட்டிருந்த தீண்டாமை சுவர் இடிக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தோக்காமூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வரும் நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் புறம்போக்கு நிலத்தில் மதில் சுவர் ஒன்று கட்டப்பட்டது. இந்த சுவரின் மூலம் பட்டியலின் மக்கள் வசிக்கும் பகுதிகளும் சாலையும் பிரிக்கப்பட்டது. ஆடு மாடுகளை மேய்க்க சுற்றி சென்றுதான் அந்தப்பக்கம் செல்ல வேண்டி இருந்தது. இதனால் அதை இடிக்க 5 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைக்கப்பட்டது.
கடந்த மார்ச்சில் 3 ஏக்கர் நிலத்தில் வேலி அமைப்பதற்காக தீவிரமாக கற்கள் நடும் பணி நடைபெற்று வந்ததால் இந்த சுவர் தொடர்பான பிரச்சனை பெரிதானது. பலமுறை பொன்னேறிற வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஓரிடு நாட்களுக்கு முன்பு அந்த சுவரை ஜேசிபி உதவியுடன் இடிக்கப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த வேலியும் அகற்றப்பட்டது.
அப்போது மேல் சாதியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மீறி அந்த சுவர் இடிக்கப்பட்டது. பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியையும் அதே ஊரில் ஆதிக்க சாதி வசிக்கும் பகுதியையும் பிரிக்க சுவர்கள் கட்டப்பட்டுள்ளது. இது போல பல சம்பவங்கள் நடந்துள்ளது. தொடர்ந்து இது போன்ற தீண்டாமை செயல்களுக்கு அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.