சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு 25% வரை உயர்த்தப்பட்டிருக்கக்கூடிய மின் கட்டண உயர்வால் தொழில் செய்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார்கள்.
எனவே இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். இந்த நிலையில் மின் கட்டணத்தை பொறுத்தவரை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கலாம் என முடிவு செய்து,
அதற்கான கொள்கை வழிகாட்டுதலை வழங்க அரசு ஆணையிட்டுள்ளதாக செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மின் கட்டணத்தை குறைப்பதனால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும் என்றும் அரசு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.கடந்த செப்டம்பர் 10ம் தேதி 25 சதவீதம் உயர்த்தப்பட்டது.
300 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ 145 கூடுதலாக வசூலிக்கப்படும். அதாவது 300 யூனிட் வரை பழைய கட்டணமாக 530 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் இனி 145 சேர்த்து ரூ 675 ஆக செலுத்த வேண்டுடியிருந்தது.
400 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர் இரு மாதங்களுக்கு ரூ 295 கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது 400 யூனிட் வரை பழைய கட்டணமாக 830 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் இனி 295 ரூபாய் சேர்த்து ரூ 1125 ஆக செலுத்த வேண்டியிருந்தது.
500 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர் இரு மாதங்களுக்கு ரூ 595 கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது 500 யூனிட் வரை பழைய கட்டணமாக 1130 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் இனி 595 ரூபாய் சேர்த்து ரூ 1725 ஆக செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இதிலிருந்து 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.