fbpx

காதல் விவகாரம் அப்பாவுக்கு தெரிந்துவிட்டது!! நீட் பயிற்சிமையத்தில் மாணவி செய்த காரியம்!

திருப்பூரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவி காதல் விவகாரம் அப்பாவுக்கு தெரிந்துவிட்டதென பயந்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் படியூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது 17 வயது மகள் ஆனந்தி திருப்பூர் பழை பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சாலையில் நீட் பயிற்சி மையத்தில் படித்து வருகின்றார். இவர் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகின்றது. மாணவியை சந்திக்க இளைஞர் நீட் பயிற்சி மைய வாசலில் காத்துக் கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் ஆனந்தியின் தந்தை வந்துள்ளார். இதைக் கண்டதும் ஆனந்திக்கு அதிர்ச்சியானது. தந்தைக்கு தன் காதல் விவகாரம் தெரிந்துவிட்டது என நினைத்து வேகமாக பயிற்சி மையத்தின் மூன்றாவது மாடியின் ஜன்னல் வழியாக குதித்தார். இதில் இடுப்பு, தலையில் பலத்த அடிபட்டு அதிக ரத்தம் வீணானது. வலியில் துடிதுடித்துக் கொண்டிருந்த ஆனந்தியை அவரது தந்தை ஓடி வந்து தூக்கினார்.

மடியில் படுக்க வைத்து கதறி துடித்தார். அக்கம்பக்கத்தினர் ஆனந்தியை மீட்டு ஆம்புலன்சில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இரவு முழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை ஆனந்தி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷ்னர் கார்த்திகேயன், காவல்துறை ஆய்வாளர் பிச்சையா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் இசையமைப்பாளர்…!!

Wed Nov 2 , 2022
சமீபத்தில் ’ஓ பாரி’ என்ற ஆல்பம் பாடல் வெளியிடப்பட்ட நிலையில் கடவுள் மந்திரத்தை அவமதிக்கும் வகையில் பாடல் இயக்கப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திரைப்படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்து வந்த தேவி ஸ்ரீ பிரசாத் தற்போது ஆல்பம் பாடல்களை இயக்க தொடங்கி உள்ளார். பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்தில் ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டார்.  ’ஓ பாரி’ என பெயரிடப்பட்டு வெளியிடப்பட்ட இந்த பாடல் இந்தியில் […]

You May Like