சென்னை வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாலையோரக் கடைகளில் காய்கறிகள் வாங்கினார். இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வந்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் மயிலாபூர் வழியாக விமான நிலையம் சென்றார். அங்குள்ள சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி அங்காடிகளில்அவர் தனது வாகனத்தை நிறுத்தி காய்கறி வாங்கினார்.
பின்னர் பெண் வியாபாரி ஒருவரிடம் பேசினார். அங்கு நின்று கொண்டிருந்த மக்களிடமும் அவர் உரையாடல் நடத்தினார். இது டுவிட்டரில் வெளியாகி உள்ளது.