பெற்றோரால் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட இளம்பெண் கணவனை விட்டுவிட்டு காதலனை திருமணம் செய்துகொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜான்சிராணி (18) என்பவர் கண்டாச்சிபுரம் அருகே பழைய கருவாட்சி கிராமத்தைச் சேர்ந்த ஞானமுத்து (22) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், 18 வயதான ஜான்சிராணிக்கு கடந்த ஆண்டு அவரது உறவினரான கிளிண்டன் என்பவரை பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதற்கிடையே, 18 வயது பூர்த்தி அடைந்த ஜான்சிராணி கடந்த 18ஆம் தேதி இரவு கணவன் வீட்டில் இருந்து சென்றுள்ளார். இந்நிலையில், காதலனை திருமணம் செய்து கொண்டு அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் சித்ரா இதுகுறித்து விசாரணை நடத்தியபோது ஜான்சிராணி தனது காதலுடன் சேர்த்து வையுங்கள் எனக் கேட்டுள்ளார். விசாரணைக்கு பின் ஞானமுத்துவின் தாயாருடன் ஜான்சி ராணியை போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.