தமிழகத்தில் இன்னும் இரண்டே மாதத்தில் காலியாக உள்ள செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் ஜமால் முகமது கல்லூரியில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதாரப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் பங்கேற்றனர9்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்,, வடகிழக்கு பருவமழை மற்றும் அதனால் ஏற்படும் டெங்கு மலேரியா எச்1 என்1 உள்ளிட்ட நோய் பாதிப்புகள் குறித்தும் அதனை தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தமிழக முதலமைச்சர் சட்டசபையில் 78 நகர்புற நலவாழ்வு மையங்களை அறிவித்தார். இந்த மையங்கள் 21 மாநகராட்சி மற்றும் 63 நகராட்சிகளில் அமைவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.
25 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் , 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைவதற்கான இடம் தேர்வு குறித்த அடிப்படை தகவல்களும் இந்த கூட்டத்தில் பகிரப்படும். அத்துடன் 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் உள்பட நடைமுறையில் உள்ள சுகாதாரப் பணிகளுக்கான திட்டங்க்ள குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது,
தமிழகத்தில் புதிய 5 மருந்து கிடங்குகள் கட்ட முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. 4307 காலி பணியிடங்கள் என கண்டறியப்பட்டு செவிலியர்களை நியமனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். இதில் 1021 பேருக்கு கலந்தாய்வு நடத்தி உள்ளோம். இரண்டே மாதாத்தில் காலியான உள்ள செவிலியர்கள் பணி நிரப்பபடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.