fbpx

’Hello… யார்னா இருக்கீங்களா’..? திருப்பதி தரிசனத்துக்காக கிராமத்தையே காலி செய்துவிட்டு சென்ற மக்கள்..!!

ஒரு கிராமமே சேர்ந்து, வீட்டை காலி செய்துவிட்டு திருப்பதிக்கு சாமி தரிசனத்துக்காக சென்றுள்ளனர். ஊரில் ஒருவருமே இல்லாததால், அங்குள்ளவர்களை பாதுகாக்க, பாதுகாப்பு பணியில் போச்சம்பள்ளி போலீசார் மற்றும் ஊராட்சி தலைவர் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்துள்ள வசந்தபுரம் கிராமத்தில் சுமார் 45 குடியிருப்பு வீடுகள் உள்ளன. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊர் வழக்கப்படி ஊரில் உள்ள அனைவரும் திருப்பதி கோயிலுக்கு சென்று வருவது வழக்கமாம். அந்த வகையில், வசந்தபுரம் கிராம மக்கள் அனைவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளனர். முதியோர்கள் மற்றும் நோயுற்றோர் சிலர் மட்டுமே கிராமத்தில் உள்ள நிலையில், ஊரில் உள்ள அனைவரும் சென்றுவிட்டதால் கிராமமே தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

’Hello... யார்னா இருக்கீங்களா’..? திருப்பதி தரிசனத்துக்காக கிராமத்தையே காலி செய்துவிட்டு சென்ற மக்கள்..!!

இதனையறிந்த போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் பிரபாவதி, கிராமத்தின் பாதுகாப்பிற்காக இரண்டு காவலர்களை நியமனம் செய்துள்ளார். அதேபோல் ஊராட்சி தலைவர் எஸ்.ரங்கநாதன் கிராமத்தில் அவ்வப்போது பார்வையிட்டு பாதுகாப்பு அளித்து வருகிறார். ஊரே காலி செய்து திருப்பதி கோவிலுக்கு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Chella

Next Post

’இனி மின் கட்டணமே செலுத்த தேவையில்லை’..!! இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Sun Dec 11 , 2022
ஆண்டு முழுவதும் நீங்கள் மின் கட்டணம் செலுத்தாமல் இலவசம் ஆக மின்சாரம் பெற விரும்பினால், தற்போது அனைத்து இடங்களிலும் சோலார் மின்சாரம் வந்துவிட்டது. ஆனால், அதனை எப்படி உபயோகப்படுத்துவது என நீங்கள் சிந்திக்கலாம். வீட்டின் மேற்கூரைகளில் சோலார் பேனல்களை பொருத்தி அதன் வாயிலாக நீங்கள் மின்சாரத்தை பெற்று, மின்கட்டணம் செலுத்துவதில் இருந்து தாராளமாக விடுபடலாம். எனினும் சோலார் பொருத்துவது பல பேருக்கும் இயலாத விஷயம் ஆகும். ஏனெனில், சோலார் தகடுகள் […]
புதுசா வீடு வாங்கப் போறீங்களா..? மின் இணைப்பு குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

You May Like