fbpx

ஹிந்தி கற்றால் தமிழ்ப்பற்று குறையாது … நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

ஹிந்தி கற்க வலியுறுத்தி பா.ஜ. தலைவர்கள் கூறிவரும் நிலையில் நிர்மலா சீதாராமனும் இந்த கருத்தை முன் வைத்ததோடு ஹிந்தி கற்பதால் தமிழ்பற்று குறையாது எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்கள் தங்கள் வரி சுரண்டப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். என கேட்டதற்கு சில மாநிலங்களின் வளர்ச்சி வேகமாக நடைபெறும். தமிழ்நாடு பல்வேறு காரணங்களால் வேகமாக வளர்ந்துள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் சிறந்து விளங்கியதும் ஆங்கில வழிக்கல்வி மிக முக்கியமான ஒரு காரணம் என சுட்டிக் காட்டி , தமிழ்நாடு தொழிற்சாலகள் அமைப்பதில் அதிக கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டார்.

தொழில்நுட்பத்துறை , சேவைத்துறை மூலம் நடைபெற்ற புரட்சி காரணமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது. அதனால் நாங்கள் அதிகம் தருகின்றோம். நீங்களும் கொடுங்கள் என திருப்பி கேட்டால் நல்லா இருக்காது. என பேசினார்.

ஹிந்தி மொழி கற்ற மாணவர்களுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகை மறுக்கப்பட்டு வருதாக தெரிவித்திருந்தார். அது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஹிந்தி, சமஸ்கிருந்தம் தேர்ந்தெடுப்போருக்கு ஸ்காலர்ஷிப் மறுக்கப்பட்டது உண்மை தான். இப்பொது வரை அது மறுக்கப்பட்டு தான் வருகிறது. நான் படித்த காலத்தில், ஹிந்தி படித்தால் தெருவில் நடக்கும் போது கீழ்தரமாக பேசுவார்கள்” என தெரிவித்தார்.

மேலும் சுதந்திரத்தின் போது அங்கிலேயர்களை வெளியேற கூடாது என சொன்னது நீதி கட்சி தான், அந்த மாடல் தான் திராவிட மாடல் என சொல்கிறனர். அதன்படி ஹிந்தி வரக்கூடாது என சொன்னால் அதை ஏற்க முடியாது என தெரிவித்த அவர், ஹிந்தி கற்றால் தமிழ் பற்று குறையாது என கூறினார்.

Next Post

சாலை ஓர கடைகளில் காய்கறி வாங்கிய நிதியமைச்சர்….

Sat Oct 8 , 2022
சென்னை வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாலையோரக் கடைகளில் காய்கறிகள் வாங்கினார். இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வந்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் மயிலாபூர் வழியாக விமான நிலையம் சென்றார். அங்குள்ள சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி அங்காடிகளில்அவர் தனது வாகனத்தை நிறுத்தி காய்கறி வாங்கினார். பின்னர் பெண் வியாபாரி ஒருவரிடம் பேசினார். அங்கு […]

You May Like