காஞ்சிபுரம் மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மைய நிர்வாகி (Centre Administrator)
— சமூகப் பணி, உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) முதுகலை பட்டம் (Master’s Degree ) பெற்றிருக்க வேண்டும்.
— பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப் பணிகளிலோ குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
— உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டியிருக்கும்.
— இப்பணிக்கு மாத ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த ஆலோசகர் (Senior Counsellor)
— சமூகப் பணி, ஆலோசனை உளவியல் M.Sc (Counselling Psychology or Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சி (Development Management) ஆகியவற்றில் முதுகலை பட்டம் M.S.W (Master’s Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும்.
— குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பில் பணிபுரிந்திருக்க வேண்டும். அல்லது 1 வருட கால அனுபவத்தில், அதே அமைப்புக்குள்ளேயே அல்லது வெளியிலோ பணிபுரிந்திருக்க வேண்டும்.
— உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். வேலை தொடர்பாக பயணம் மேற்கொண்டால் பயணப்படி வழங்கப்படும்.
— இப்பணிக்கு மாத ஊதியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு அலுவலர்கள்
— சமூகப் பணி (Social Work) உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சி (Development Management) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) பெற்றிருக்க வேண்டும்
— பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப் பணிகளிலோ குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
— உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப்படும்போது சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும்.
— இப்பணிக்கு மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இப்பணியில் சேர வயது வரம்பு 35-க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)
— ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6,400 வழங்கப்படும்.
மேற்கண்ட பதவிகளுக்கு விரும்பு விண்ணப்பதாரர்கள், உரிய சான்றிதழ்களுடன் 22.05.2023 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் 631 501 என்ற முகவரியில் நேரடியாக விண்ணப்பம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.