ஆமணக்கு எண்ணெயை குழந்தைக்கு கொடுத்ததால் பச்சிளங்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஈச்சம்பட்டியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ்(36) . இருவருக்கும் முசிறி மலைப்பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் ஆனது. கடந்த 25 நாட்களுக்கு முன்புதான அழகான பெண் குழந்தையை இந்த தம்பதிபெற்றெடுத்தார்கள். தாய் வீட்டின் பராமரிப்பில் இருந்த இளம்பெண் குழந்தைக்கு இரண்டு நாளுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் ,ஆமணக்கு எண்ணைணை வசம்புடன் கலந்து கொடுத்துள்ளனர்.
அப்போதிலிருந்து குழந்தைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குளித்தலை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை உயிரிழந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் , குழந்தைக்கு அளவுக்கு அதிகமான ஆமணக்கு எண்ணெய் கொடுக்கப்பட்டதால் இந்த துயரமான சம்பவம் நடந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.